அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகக் கூறப்படும் கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்துமாறுக்கோரி, எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி, வவுனியா, நெடுங்கேணி பேருந்து நிலையத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
வவுனியா வடக்கினை சேர்ந்த பொது அமைப்புக்களுடன் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, நடத்திய விசேட சந்திப்பின்போதே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், கிவுல் ஓயா திட்டம் தமிழ் மக்களின் இனப் பரம்பலை குறிவைக்கவில்லை என்றும் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டதாகவும் அரசாங்கம் கூறுகிறது.



