நாடு முழுவதும் மருத்துவர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

இன்று வெள்ளிக்கிழமை (23) காலை 8.00 மணி முதல் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இலவச சுகாதார சேவைகள் மற்றும் மருத்துவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை சுகாதார அமைச்சு செயல்படுத்தத் தவறியதால் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், மகப்பேறு மற்றும் குழந்தைகள் வைத்தியசாலைகள், சிறுநீரக வைத்தியசாலைகள் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலைகளில் இந்த வேலைநிறுத்தம் செயல்படுத்தப்படாது எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.