நாமல் தலைமையிலான குழு இந்தியா நோக்கி பயணம்!

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை கொண்டாடுவதற்காக பாராளுடன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன குழு இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை நோக்கி பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனவரி 26ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியாவின் 77ஆவது குடியரசு தின விழாவை கொண்டாடுவதற்காக இந்த குழு இந்தியா நோக்கி பயணம் மேற்கொள்ளவுள்ளது.

நாமல் ராஜபக்ஷ தலைமையிலான இந்த குழுவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சித்ரல் பெர்னாண்டோ, சமிந்தினி கிரியெல்ல, சதுர கலாபதி மற்றும் பிரசாத் சிறிவர்தன ஆகியோருடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான இந்திக அனுருத்த, சஞ்சீவ எதிரிமான்ன, சம்பத் அத்துகோரல மற்றும் மிலிந்த ராஜபக்ஷ ஆகியோரும் அடங்குகின்றனர்.

இந்த பயணம் தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் இல்லத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.