“கல்வி மறுசீரமைப்பு அவசியம். அது எமது கலாசாரம் மற்றும் எமது நாட்டுக்கே உரிய வகையில் இடம்பெற வேண்டும். சர்வமதத் தலைவர்கள், துறைசார் நிபுணர்களுடன் இது சம்பந்தமாக கலந்துரையாட வேண்டும்.
பெற்றோர்களிடம் இருந்தும் கல்வி மறுசீரமைப்பு பற்றி ஆலோசனை பெறவேண்டும். எனவே, கல்வி மறுசீரமைப்பை ஒரே நாளில் செய்ய முடியாது. முறையாக அதற்குரிய பணி இடம்பெற வேண்டும் என்பதே எனது கோரிக்கை.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.



