இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்று வெள்ளிக்கிழமை (16) இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ள நிலையில், புதிய அமெரிக்கத் தூதுவர் நியமிக்கப்படும் வரை, இலங்கையில் அமெரிக்கத் தூதரகத்தின் இடைக்கால பொறுப்புகளை துணைத் தூதுவர் (Deputy Chief of Mission) ஜெய்ன் ஹோவெல் ஏற்கவுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஜெய்ன் ஹோவெல், Chargé d’Affaires ad interim என்ற பதவியில் இருந்து, அமெரிக்கா – இலங்கை இடையிலான இருதரப்பு உறவுகள், தூதரக நடவடிக்கைகள் மற்றும் இராஜதந்திர தொடர்புகளை முன்னெடுத்து செல்லவுள்ளார்.
ஜூலி சங் தனது பதவிக்காலத்தில், அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான அரசியல், பொருளாதார, மனிதாபிமான மற்றும் ஜனநாயக தொடர்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியதாக குறிப்பிடப்படுகிறது.
புதிய அமெரிக்கத் தூதுவர் இலங்கைக்கு வருகை தரும் வரை, அமெரிக்கத் தூதரகத்தின் அனைத்து அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளையும் ஜெய்ன் ஹௌவெல் வழிநடத்துவார் என அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.



