சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உள்ளிட்ட குழுவினர் இன்று (12) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
தென்னாப்பிரிக்காவின் டர்பனில் இருந்து சீனா நோக்கிச் சென்ற 17 பேர் கொண்ட சீனக் குழுவினர், இன்று (12) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இன்று பிற்பகல் வரை நாட்டில் தங்கியிருக்கும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உள்ளிட்ட குழுவினர், மீளவும் தாயகம் நோக்கி திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதர் குய் செங்ஹாங், தூதரகத்தின் உயர் அதிகாரிகள் குழுவினர் சீன உயர் மட்ட குழுவினரை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



