இந்திய அரசின் 5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவிடன் வடக்கு மற்றும் தலைமன்னார் புகையிரத பாதைகளில் மறுசீரமைப்பு பணிகள் ஞாயிற்றுக்கிழமை (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் ஆகியார் கலந்துக்கொண்டனர்.
மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் புகையிரத இயக்கத்தை இயக்கும் நோக்கத்துடன் பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட வடக்கு மற்றும் தலைமன்னார் புகையிரத பாதைகளின் மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல் பணிகள், தித்வா பேரழிவால் ஏற்பட்ட சேதம் காரணமாக தடைபட்டன.
காட்டு யானைகளின் நடமாட்டத்தை எளிதாக்க ஐந்து பாலங்கள் மற்றும் ஒரு சுரங்கப்பாதை கட்டுமானம் இந்த திட்டத்தில் அடங்கும்.நடந்து கொண்டிருக்கும் மறுசீரமைப்பு பணிகளுடன் முன்னர் நிறுத்தப்பட்டிருந்த மேம்பாட்டு நடவடிக்கைகள் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சு உறுதிப்படுத்துகிறது.



