இலங்கையில் புகைபிடிப்பதால் தினமும் 50 பேர் அகால மரணம்!

இலங்கையில் சுமார் 15 இலட்சம்  பேர் (பெரியவர்கள்) புகைத்தலில்  ஈடுபடுகின்றனர்.  எமது நாட்டில் தினமும்  புகைபிடிப்பவர்கள்  50 பேர்  அகால மரணத்தை  தழுவுகின்றனர் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC ) தெரிவித்துள்ளது.

இலங்கையின் புகையிலை கட்டுப்பாட்டு  முயற்சிகளில் புகையிலைத் துறையின் தலையீடுகள் ஏற்படுத்தும் தாக்கம் – சர்வதேச மற்றும் இலங்கை புகையிலைத் துறை தலையீடுகளின்  குறியீட்டு என்ற தலைப்பில் இன்று புதன்கிழமை (7) கொழும்பு மரியட் ஹோட்டலில் நடத்திய ஊடக மாநாட்டை மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC ) ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டதோடு துறை சார்ந்த விற்பன்னர்கள் ,வைத்தியர்களின் கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டன.

இலங்கையில்  வைத்தியர் எரந்திக்க பத்திராஜா,  வைத்தியர் பாலித்த தென்னக்கோன்,  வைத்தியர்  ஆர்.எப். ராஜேந்திரா, வைத்தியர் பாலித்த தென்னக்கோன்  மற்றும் அடிக் பணிப்பாளர் ஆகியோர்களும் உரையாற்றினார்கள்.

இங்கு கருத்து  தெரிவிக்கையில்  இலங்கையில் நீண்ட காலமாக புகையிலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும் பொது சுகாதாரத்திற்கான பாரிய அச்சுறுத்தல் புகையிலை  பாவனை இன்னமும் காணப்படுகின்றது.  இலங்கையில் சுமார் 15 இலட்சம்  பேர் (பெரியவர்கள் ) புகைத்தலில்  ஈடுபடுகின்றனர்.  எமது நாட்டில் தினமும்  புகைபிடிப்பவர்கள்  50 பேர்  அகால மரணத்தை  தழுவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்  இலங்கையில் 83 வீதமான இறப்புக்கள்  தொற்றா நோய்களினால்  ஏற்படுகின்றன.  புகையிலை பாவனையானது தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கு ஏதுவாக இருக்கும் நான்கு  காரணங்கள்  முதன்மை காரணமாக விளங்குகிறது.  இந்நிலையில் நாட்டின் பொது சுகாதாரத்திற்கு  பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  நிலைமையாகும்.  இலங்கையர்கள் தினமும்  ரூபா 520 மில்லியன்களை சிக்ரட் புகைப்பதற்கு செலவிடுகின்றனர்.

ஒவ்வொரு நிமிடத்திற்கு  10 பேர் இறந்த வண்ணம் இருக்கின்றனர்.  இது தனி மனிதனின்  குடும்பத்தின் ஒரு  சமூகத்தின் பொருளாதார சரிவுக்கு  காரணமாகவும்  அமைகின்றது.

இந்த சவால்களை இலக்கு வைத்து  தனது நிறுவனத்தின் லாபத்தை  நிலைநாட்டுவதற்கு  சரிந்து வரும் வாடிக்கையாளர்களை தொடர்ந்து  புகையிலை  நிறுவனம் மேற்கொண்டு  வருகிறது.  இதன் மூலம்  பொது சுகாதாரம் நேரடியாக பாதிப்படைகின்றது குறிப்பிடத்தக்கது.

புகையிலை கட்டுப்பாட்டிற்கான கட்டமைப்பு FCTC) உடன்படிக்கை   பங்கேற்றுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள்  5.3 மற்றும் அதற்கான வழிகாட்டுதல் மூலம்  தங்களின் சுகாதாரக் கொள்கைகள் பாதுகாக்க வேண்டியது முக்கியமான  பொறுப்பாகும்.

வணிக நலன்கள்  மற்றும் பிற தனிப்பட்ட  நலன்களின் தலையீடு லிருந்து  பொது சுகாதாரக் கொள்கைகள் பாதுகாப்பதற்காக உறுப்பு நாடுகளுக்கு அதிகாரமும் வழிகாட்டுதலும் வழங்குகின்றமைக்கு் குறிப்பிடத்தக்கது.