தலவாக்கலையில் மண்சரிவு அபாயம் ; 67 குடும்பங்கள் இடம்பெயர்வு

WhatsApp Image 2026 01 04 at 13.19.17 தலவாக்கலையில் மண்சரிவு அபாயம் ; 67 குடும்பங்கள் இடம்பெயர்வு

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குச் சொந்தமான கிறேட்வெஸ்டன்  தோட்டத்தில் உள்ள ஒரு லயன் தொகுதி வீடுகள் கடந்த மோசமான காலநிலை காரணமாக மண்சரிவு ஏற்படும்  அபாயகரமான வெடிப்பு காணப்பட்டதால் குறித்து வீடுகளில் வசித்த 67 குடும்பங்களைச் சேர்ந்த 270 உறுப்பினர்கள் தற்காலிகமாக கிறேட்வெஸ்டன் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

கடந்த நாட்களில் சீரான காலநிலை நிலவி வருவதால் மண்சரிவு அபாயம் தொடர்பில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பின்னர் கிறேட்வெஸ்டன் தோட்டத்தில்  பெரிய அளவில் அபாய நிலையில் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நாளை (05) ஆரம்பமாக உள்ள நிலையில் (04) ஆம் திகதி தற்காலிக முகாமில் இருந்து வெளியேறி சென்றனர்.