இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் ஆரம்பமான 2025ஆம் ஆண்டின் ஜனவரி 1ஆம் திகதியில் இருந்து ஓராண்டுக் காலப்பகுதியில், அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட 26 முக்கிய சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரச் சீர்திருத்தம் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கில் இந்தச் சட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
நிறைவேற்றப்பட்ட சட்டங்களில் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் நீக்கம், VAT வரித் திருத்தம் மற்றும் குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் சட்டம் போன்றவை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இவற்றின் மூலம் நாட்டின் நிதி முகாமைத்துவம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.



