நாடு முழுவதும் மின்சார வாகன பேட்டரி சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கு திட்டம்!

இலங்கை பல நாடுகளிலிருந்து மின்சார வாகனங்களை  இறக்குமதி செய்து வருவதால் நாடு முழுவதும் மின்சார வாகன பேட்டரி சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் திட்டத்திற்கு கவனம் செலுத்தி வருவதாக சீனத் தூதுவர் சீனத் தூதுவர் கீ சென்ஹொங்கிடம் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  மற்றும் சீனத் தூதுவர் கீ சென்ஹொங் இடையில் வெளிவிவகார அமைச்சில்  இன்று திங்கட்கிழமை (29) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போதே அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையானது, சீனா உள்ளிட்ட உலகளாவிய வாகனச் சந்தைகளிலிருந்து பெருமளவில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு நன்கொடையாக நாடு முழுவதும் மின்சார வாகன பேட்டரி சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டமிட்டு வருவதாக அமைச்சர் விஜித ஹேரத் யோசனையை முன்வைத்துள்ளார்

அத்துடன், எதிர்காலத்தில் மின்சாரத்தினால் இயங்கும் பஸ்களையும் அதிகளவில் இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.