மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம்: நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 20 ஆம் ஆண்டு நினைவேந்தலையிட்டு இன்று வியாழக்கிழமை (25) மட்டக்களப்பு காந்தி  பூங்காவில் இருந்து மாநகரசபை மண்டபம் வரை படுகொலைக்கு நீதி வேண்டி ஆர்பாட்டம் இடம்பெற்றது.

இதில்  தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகரசபை முதல்வர் பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டுடனர்.