தையிட்டி சம்பவத்துக்கு பருத்தித்துறை நகரசபை கண்டனம்!

பருத்தித்துறை நகரசபையின் மாதாந்த அமர்வில் தையிட்டி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகரசபையின் அமர்வானது தவிசாளர் வின்சன் டீபோல் டக்ளஸ் தலைமையில் இன்று (24) காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.

இன்றைய அமர்வில் 2 உறுப்பினர்கள் சமுகமளிக்கவில்லை. இந்த அமர்வில் 2026ஆம் ஆண்டுக்கான நடமாடும் சேவைகளுக்கான அனுமதி, வாகன திருத்தங்களுக்கான அனுமதிகள், மின் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான அனுமதிகள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

அத்துடன் அண்மையில் தையிட்டியில் வேலன் சுவாமிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டமைக்கும் அமர்வில் எதிர்ப்பு தெரிவித்து கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.