மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கைகள் நீக்கப்பட்ட போதிலும், அந்த இடங்களில் இன்னும் ஆபத்து நீங்கவில்லை எனத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மழை நிலைமை குறைவடைந்ததன் காரணமாகச் சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டிருந்தாலும், அதிகாரிகள் வந்து குறித்த ஆபத்தான இடங்களைப் பரிசோதிக்கும் வரை பொதுமக்கள் அந்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என அந்த அமைப்பின் சிரேஷ்ட விஞ்ஞானி ஹசலி சேமசிங்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



