போர் பாதிப்பு காரணமாக தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள், கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை தளமாக கொண்டு செயற்பட்டுவரும் ஐ.எல்.சி. வானொலி நேயர்கள் மற்றும் தமிழ் எய்ட் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரது நிதி உதவியில் வடமராட்சி ஊடக இல்லத்தின் அனுசரணையில் இவ் உதவு செயற்றிட்டம் 21/12 முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போர் பாதிப்பு காரணமாக தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களது நல்வாழ்விற்காக செயற்பட்டு வரும் ஒளிமயமான வாழ்வுக்கு உதவும் அறக்கட்டளையின் ஊடாக மாற்றுத்திறனாளிகளாக உள்ள போராளிகள் உள்ளிட்ட 39 குடும்பங்களுக்கு தலா 9,000 ரூபா பெறுமதியான போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதிகளும் பாடசாலை செல்லும் அவர்களின் 16 பிள்ளகளுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஐ.எல்.சி. வானொலியின் தாயக செய்தியாளரும் யாழ் வடமராட்சி ஊடக இல்ல செயலாளருமான இரா.மயூதரன் ஒழுங்கமைப்பில், கிளிநொச்சியில் உள்ள இடமொன்றில் வைத்து இவை வழங்கப்பட்டுள்ளது. இதன்போது நான்கு இலட்சத்து முப்பத்தையாயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





