தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்செயற்பாடுகள் இருக்கவில்லையெனவும், கடற்புலிகளின் தளபதி வடக்கு, கிழக்கு கடற்பரப்பை தமது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலால் தாயகப்பரப்பிலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ரவிகரன், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற இந்திய இழுவைப்படகுகளின் அத்து மீறல் செயற்பாடுகளுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிற்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.



