தமிழர்களை கொல்ல வேண்டும் என்று கூறிய தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

“தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும்” எனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கைது செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் மன்றில் முன்னிலைப்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், இதுவரை ஏன்? அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவில்லை என்பது தொடர்பில் விளக்கமளித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு ஊடகங்களுக்கு அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் வழங்கிய செவ்வியில் ‘வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து குறித்த தேரர் தெரிவித்த இந்த வன்முறையான கருத்துக்கு எதிராக கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க ரனஞ்சக என்பவர் முறைப்பாடு செய்ததுடன், சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் உள்ள சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றிலும் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள் அனுப்பப்பட்ட நிலையில் கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த தேரரை கைது செய்யுமாறு பரிந்துரை வழங்கியது.
இந்நிலையில், குறித்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, குறித்த தேரர் நீதிமன்றில் சமூகமளிக்காத நிலையில் வழக்கு தொடுநர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரையின்படி குறித்த தேரர் இதுவரை கைது செய்யப்படவில்லை என நீதவானின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இந்தநிலையில் அடுத்த வழக்கு தவணையான எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் குறித்த தேரரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த