யாழ்ப்பாணம் மாநகர சபையின் பாதீடு நிறைவேற்றம்!

2026 ஆண்டுக்கான யாழ்ப்பாணம் மாநகர சபையின் பாதீடு மேலதிக இரண்டு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் பாதீடு மீதான விவாதம் நிறைவடைந்த நிலையில் இன்றையதினம் (05) வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

அதன்படி தமிழரசு கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த 23 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அதேநேரம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளை சேர்ந்த 21 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் இன்றைய சபை கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதற்கமைய மேலதிக இரண்டு வாக்குகளால் பாதீடு நிறைவேற்றப்பட்டது.