இலங்கையை  மீளக்கட்டியெழுப்பும் பணிகளுக்கு வெளிநாட்டு சீன சங்கம்  நன்கொடை

அனர்த்தத்திற்குப் பின்னர் இலங்கையை  மீளக்கட்டியெழுப்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், வெளிநாட்டு சீன சங்கம்  ஒரு மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.

அதற்காக, குறித்த காசோலையை நேற்று முன்தினம்  திங்கட்கிழமை (01) ஜனாதிபதி அலுவலகத்தின் சார்பாக மக்கள் தொடர்புப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே இடம் கையளிக்கப்பட்டது.

இதில் சீனத் தூதுவ அதிகாரிகள் உள்ளிட்டவர் கலந்து கொண்டிருந்தனர்.