இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் இந்தியா இடையூறு: பாகிஸ்தான் கருத்து

இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு இந்தியா வான்வழி அனுமதி வழங்காமல் இடையூறு வழங்குகின்றது என பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.

இலங்கைக்கான மீட்பு நடவடிக்கைகளில் இந்தியா ஆர்வத்துடனும் ஆத்மார்த்தமாகவும் ஈடுபட்டு வருகின்றது. இவ்வாறிருக்கையில் பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டு மிகவும் அபத்தமானது என்பதுடன், அந்தத் தகவல்கள் தவறான தகவல்களாகவும் காணப்படுகின்றன என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ஷ்வால் தெரிவித்துள்ளார்.