சுயநிரப்பக் கள வைத்தியமனை, 70க்கும் மேற்பட்ட பயிற்றப்பட்ட மருத்துவ மற்றும் ஆதரவு பணியாளர்களுடன் இந்திய விமானம் ஒன்று இலங்கைக்கு வந்துள்ளது.
இந்த மனிதாபிமான உதவி, இலங்கையில் தற்போது நிலவிய அவசர சூழ்நிலைக்கு உடனடியாக பதிலளிக்கும் வகையில் அனுப்பப்பட்டுள்ளது. கள வைத்தியமனை உட்பட வரும் வாகனங்கள் அவசர மருத்துவ சேவைகள், அறுவை சிகிச்சை, அவசர மருத்துவ பராமரிப்பு மற்றும் தீவிர சிகிச்சை வசதிகளுடன் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்திய விமானப்படையின் உதவி இலங்கை மக்களுக்கான மருத்துவ பாதுகாப்பை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கை என அரசியல் மற்றும் மருத்துவ அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.




