வங்காள விரிகுடாவில் இன்று 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் சிறிய அளவிலான நில அதிர்வு அலைகள் ஏற்பட்டன. இருப்பினும் இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



