இலங்கைக்கு சீன அரசு பேரிடர் நிவாரண உதவி!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சீனா அரசாங்கம், ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியையும், 10 மில்லியன் சீன ரென்மின்பி மதிப்புள்ள நிவாரண பொருட்களையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

டிவாட் புயல் இலங்கையில் ஏற்படுத்திய கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பல உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இலங்கையில் பாதிக்கப்பட்டோருடன் சீன மக்கள் தங்களது துயரத்தை பகிர்கின்றனர்.