இலங்கையில் அவசர நிலை அறிவிப்பு!

திட்வா புயலால் இலங்கையில் கன மழை பெய்து வரும் நிலையில், நாடு முழுக்க அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தேவையான சேவைகள் தடையின்றி நடைபெறுவதற்காக ஜனாதிபதி அனுர குமார் திஸாநாயக்க அவசர நிலையை அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பொது இயக்குநர் பிரசன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.