இலங்கையின் நிவாரண முயற்சிகளுக்கு அமெரிக்கா 02 மில்லியன் டொலர் ஒதுக்கீடு!

இலங்கையின் அவசர நிவாரண முயற்சிகளுக்கு  ஆதரவாக அமெரிக்கா 02 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிவாரணமாக அறிவித்துள்ளது.

நாட்டில்  உள்ள மக்கள் பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக கடினமான நாட்களை எதிர்கொள்வதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கவலை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த நெருக்கடியின் போது அமெரிக்கா இலங்கையுடன் ஒற்றுமையாக நிற்கிறது என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்கான வொஷிங்டனின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது என்றும் அவர் கூறினார்.

குறித்த  நிதி அவசர நிவாரண நடவடிக்கைகளுக்குச் செல்லும் என கூறிய  ஜூலி சங் தொடர்ச்சியான அசாதரண வானிலை நிலைமைகளுக்கு மத்தியில் மீண்டும்  நாட்டை கட்டியெழுப்புவதில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மையை  பிரதிபலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.