தமிழீழ விடுதலையின் அரசியல் ஆன்மாவை உயிர்ப்போடு இயங்க வைக்கும் நோக் கோடும். உயிர் ஈகம் செய்த போராளிகளை நினைவு கூறும் வகையிலும் 1989ஆண்டிலிருந்து நடந்த வரும் மாவீரர் நாள் இன்று புதியவரலாற்று பரிமாணத்தை எடுத்து உள்ளது!
இந்திய ஆக்கிரமிப்பு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையினால் கடந்த 1989 ஆண்டிலிருந்து அறிவித்தது கடைபிடிக்கப்பட்டு வருகிறது .மாவீரர் தினமானது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் விடுதலைப் போரில் முதல் களப்பலியான மாவீரன் சங்கர் அவர்களின் நினைவு நாளை தேர்வு செய்தனர். மாவீரர் என்ற சொற்பதம் முக்கியமான ஒன்று. மாவீரர் என்ற வரையறைக்குள் தமிழீழ விடுதலைப் போரில் உயிரிழந்த போராளிகள் உள்ளிழுக்கப்பட்டனர்.
வழமையாக உலகில் உள்ள அனைத்து விடுதலை மற்றும் புரட்சிகர இயக்கங்கள் ஏதோ ஒரு வகையில் தமது இறந்து போன உறுப்பினர்களை நினைவு கூறும் நிகழ்ச்சிகளை நடத்துவது மரபான அரசியல் .
இவ்விடயத்தில் தமிழீழம் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்தவர்களை மாவீர்களாக உருவகப் படுத்தி மாவீரர்களை நினைவு கூறுவதன் வழியில் விடுதலைப் போருக்கான இலட்சிய உறுதியை போராளிகள் ,மக்கள் மற்றும் உலகெங்கி லும் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் மத்தியில் தக்க வைக்கிறது.
சோவியத் ஒன்றியத்தின் சிதைவுக்குப் பிறகு அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளின் மேலாதிக்கம் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் காலத்தில் தொடங்கி வீறு கொண்டு எழுந்த நின்ற தமிழீழ விடுதலைப் புலிக ளின் இலட்சிய உறுதியை இன்றுவரை உலகிற்கு பறைசாற்றி வருகிறது மாவீரர் நாள் .!
புலிகள் இருக்கலாம் இல்லாமலும் போக லாம் ஆனால் புலிகளின் வரலாற்றை ஒருவரும் புறக்கணிக்க முடியாது என்பதற்கு 2009 பிறகு தாயகத்திலும் உலகெங்கிலும் ஆண்டு தவறாமல் மக்களால் கடைப்பிடிக்கப்படும் மாவீரர் நாள் நிகழ்வுகளே சான்றாக உள்ளது.
புலிகளின் தலைமையானது மாவீரர் நாளை அறிவித்து நினைவு கூறும் ஆண்டிலிருந்தே தமிழகத்திலும் மாவீரர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆரம்ப ஆண்டுகளில் ஒரு சில இயக்களால் சிறிய அளவில் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் 2009 க்கு பிறகு பரவலான மக்களை ஈர்த்து மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்படுகிறது .
தமிழீழ விடுதலைப் போரின் பின்கள தளமாக இருந்த தமிழகம், 2009 ஆம் ஆண்டு புலிகளின் ஆயுத மௌனிப்புக்குப் பிறகும் தனது வரலாற்று கடமையினை நினைவு கூறும் வகையில் மாவீரர் நினைவு நாளில் நிகழ்வுகளை நடத்தி மாவீரர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தி வருகிறது. அரசியல் விருப்பு வெறுப்புக்கு அப்பாற் பட்டு தமிழகத்தின் ஆதரவுக் கரம் தமிழீழத்தை நோக்கி உள்ளது என்பதையே தமிழிகத்தில் நடக்கும் மாவீரர் நாள் உலகிற்கு சொல்லும் அரசியல்.
அதேபோல் இந்திய அரசிற்கும் தமிழகம் தனது அரசியல் நிலைப்பாட்டை இந்நாளில் அழுத்தமாக சொல்லி வருகிறது . தில்லியின் ஆதிக்கம் தமிழகத்தை அழுத் தும் போது கூட தமிழகம் எந்தவொரு காலத்திலும் தமது தமிழீழ விடுதலை ஆதரவு நிலைப் பாட்டி லிருந்து பின்வாங்கவில்லை. இப்போதும் தமிழ கம் பின்வாங்கப் போவதில்லை என்பதை தில்லி க்கு உறுதி பட கூறி வருகிறது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக போன்ற அரசியல் கட்சிகள் மாவீரர் நாள் நிகழ்வுகள் குறித்து அக்கறை காட்டுவது இல்லை. அக்கறையும் காட்டாது மாவீரர் நாள் நிகழ்வுகள் ஒரு வகையில் அவர்களு க்கு எதிரான அரசியல் வடிவம். மொழி வழி தேசிய சுயநிர்ணய உரிமையை பேசும் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சிய நாளான மாவீரர் நாள் இந்திய போன்ற பண்பாட்டு தேசியம் பேசும் நாடுகளின் ஆளும் தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிரானது, தனது இருத்தலுக்கே வெடி வைக்கும் மொழி வழி தேசிய விடுதலைப் போரின் நாயகர்களை தமிழ் நாட்டில் இயங்கும் பெரிய கட்சிகள் கண்டு கொள்ளப் போவதில்லை, இதில் அதிர்ச்சி அடைய ஏதும் இல்லை.
தில்லியின் தயவு மட்டுமே தமிழ்நாட்டிற்கு போதும் என்று நினைக்கும் இக்கட்சிகளும் தான் தில்லியின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளை தீர்மானிக்கிறது.
பிற்போக்கானதும் வரலாற்று இயங்கியலு க்கு எதிரானதுமான கலாச்சார தேசியத்திற்கு மாற்றாக முற்போக்கானதும் இயற்கையானதும் வரலாற்று இயங்கியலுக்கு உட்பட்டதுமான மொழி வழி தேசியத்தின் விடுதலைக் குரலை இந்தியாவின் கேட்காது. மாவீரர் நாள் நிகழ்வுகள் கூறு விரும்புவது தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை ஒரு தேசிய இனத்தின் உயிர் இயக்கம் போன்றது.
உலக வரலாறு இதை ப் புறக்கணித்து விட்டு நகர முடியாது என்பதைத் தான். தமிழ் நாட்டின் அரசியல் திசைவழி தீர்மானிப்பதில் தமிழீழத்தில் பங்கு தவிர்க்க முடியாதது. வங்காளதேசத்தை உருவாக்கிய தில்லியால் தமிழீழத்தை கனவு கசெய்து கூட பார்க்க முடிய வில்லை, தமிழீழம் என்பது தில்லியின் ஆட்சியாளர்களுக்கு இன்றள வும் ஓர் கொடுங்கனவாக நீடித்து வருகிறது. தனது காலுக்கடியில் எரிந்து கொண்டிருக்கும் தமிழீழத்தை என்ன செய்வது என்று தில்லிக்கு இன்று வரை தெரியவில்லை.
எத்தகைய அரசியல் சமன்பாடுகளை சிந்தனை செய்து பார்த்தாலும் சரிப்பட வில்லை. இன்றைய நிலையிலும் தமிழகத்தில் நடைபெறும் மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள் ஆன்மீக ரீதியாக தமிழர்களின் விடுதலை வேட்கையை பறைசாற்றும் நிகழ்வு என்பது சர்வதேசத்திற்கு நன்றாகவே தெரியும்.
நீண்ட வரலாற்று பராம்பரியமும் இலக் கண, இலக்கிய வளமும், பன்பாட்டு செழு மையும் கொண்ட தமிழர்களின் ஓரே நம்பிக்கையாக ஒளி வீசி கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் போராட்டம் முடக்கப்பட்ட நிலையை எந்த தமிழர்களும் ஏற்கப் போவதில்லை.
ஏற்க விரும்பவில்லை என்பதையே தமிழ கத்தில் நடக்கும் மாவீரர் நாள் கூறுகிறது. எவர் ஏற்றால் என்ன? மறுத்தால் என்ன? தமிழீழத் திற்கான ஆதரவு தொடரவே செய்யும் என்பதை மாவீரர் நாள் நிகழ்வுகள் உறுதி செய்து வருகிறது. 16 ஆண்டுகள் கடந்தும் தாயகம், தமிழகம் உள் ளிட்ட உலகெங்கிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் உயிர்ப் போடு நடக்கிறது எனில் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஓயாது என்பது தான் உண்மை.



