திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/பாதிமா பாலிகா வித்தியாலயத்துக்கு செல்லும் வீதியானது கனமழை காரணமாக மூழ்கியுள்ளது.
மேலும் கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியின் புதுக்குடியிருப்பு பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததுடன் மின்சார கம்பிகளும் தடைப்பட்டதுடன் போக்குவரத்தும் சில மணி நேரம் தடைப்பட்டது.
முள்ளிப்பொத்தானை, 4ம் வாய்க்கால் பாலம்போட்டாறு உட்பட தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.



