இலங்கையில் HIV தொற்று அதிகரிப்பு

உலகளவில் HIV தொற்றைக் குறைப்பதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சமீபத்திய தரவுகளின்படி இலங்கை அதற்கு நேர்மாறான திசையில் நகர்ந்து வருகிறது.

உலகளவில், 2010 உடன் ஒப்பிடும்போது 2024ஆம் ஆண்டில் புதிய HIV தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 40% குறைந்துள்ளன.  எனினும், HIV மீதான ஐக்கிய நாடுகளின் கூட்டறிக்கை இந்த வீழ்ச்சி வீதம் பிராந்தியத்திற்குப் பிராந்தியம் வேறுபடுவதாகவும், இலங்கை தவறான காரணங்களுக்காகத் தனித்து நிற்பதாகவும் குறிப்பிடுகிறது.

அதே காலகட்டத்தில் நாட்டில் மதிப்பிடப்பட்ட புதிய HIV தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 48% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இது HIV பரவல் அதிகரித்து வருவதைக் குறிக்கிறது.
இலங்கை 2024இல் 824 புதிய HIV தொற்று சம்பவங்களை பதிவு செய்ததுடன் இது ஒரே ஆண்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

கடந்த பத்தாண்டுகளாக காணப்பட்ட இந்த உயர்வுப் போக்கு தொடர்கிறது. தற்போதைய மதிப்பீடுகளின்படி, நாட்டில் சுமார் 5,700 பேர் HIV தொற்றுடன் வாழ்கின்றனர்.  2010 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் பதிவான HIV தொற்றுறுதி சம்பவங்களில் ஒரு நிலையான மற்றும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகிறது.