மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 22, 21 பல பிரதேசங்களிலும் குறிப்பாக தாந்தா மலை முருகன் ஆலய பிரதேசம், சித்தாண்டி கதிரவெளி மற்றும் கோறளைப்பற்றின் பல பிரதேசங்கள் என பல இடங்களிலும் தொல்லியல் இடம் எனும் அடையாளப்படுத்தல் பதாகை தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நேற்று (23) கோரளைப்பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பொண்டுகள்சேனை, முறுத்தானை, முருக்கன்தீவு, திகிலிவெட்டை போன்ற பிரதேசங்களில் நடப்பட்ட தொல்லியல் இடம் எனும் பதாகை 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்திற்கு முரணாக நடப்பட்டிருக்கிறது என குறிப்பிட்டு கோறளைப்ற்று பிரதேச சபை தவிசாளர் சுந்தர்லிங்கம் சுதாகரன் மற்றும் பிரதித் தவிசாளர் குழந்தைவேல் தவநீதன் மற்றும் உறுப்பினர்கள், ஊழியர்கள் நேரடியாக களத்திற்கு வந்து அவர்களுடைய அனுமதியின்றி நிறுவப்பட்ட அந்த பதாதைகள் அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதேபோன்று வெல்லாவெளி பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் தலையீட்டுடன் வெல்லாவெயில் பதாதை நடும் பணி நேற்றுத் தடுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.



