யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்ற செயற்பாடுகள்மு ழுமைபெறாமலிருப்பது கவலையளிக்கின்றது என்று வீடமைப்பு நிர்மாண மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எச்.எம்.சுசில் ரணசிங்ஹ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி இந்த விடயத்தில் கவனமெடுக்குமாறு தன்னை தனிப்பட்ட ரீதியாக அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்காக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் சென்ற ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு முழுமைப்படுத்தாத வீடுகள் தொடர்பாகவும் கவனமெடுக்கப்படும் என்றும் வீடமைப்பு அமைச்சர் எச்.எம்.சுசில் ரணசிங்ஹ தெரிவித்துள்ளார்.



