காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல பகுதிகள் கனமழை காரணமாக நீரில் மூழ்கியதை அடுத்து, 2025ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இந்த மாவட்டங்களுக்குள் பல இடங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்துக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, அந்தந்த பரீட்சை நிலையங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு உதவுவதற்காக படகு வசதிகளை ஏற்பாடு செய்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் பரீட்சை நிலையங்களுக்கு தாமதமின்றி சென்றடையக்கூடிய வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது செயற்படுத்தப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.



