மட்டக்களப்பு – வெல்லாவெளியில் தொல்பொருள் திணைக்களத்தின் காணி அபகரிப்பு முயற்சி முறியடிப்பு

தொல்பொருள் திணைக்களத்தினால் மட்டக்களப்பு – வெல்லாவெளி பிரதேச சபைக்குட்பட்ட கண்ணபுரம் கிராமத்தில் உள்ள வீதியை தொல்லியல் இடமாக அங்கிகரித்து பெயர் பலகை நடுவதற்கு இன்று (21) முன்னெடுக்கப்பட்ட முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக அங்கு சென்ற தொல்லியல் திணைக்களத்தினரை போரதீவுப் பற்றுப் பிரதேசசபையின் தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் துரத்தியடித்தியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.  பின்னர் வெல்லாவெளியில் உள்ள பிரதேச செயலகத்திற்குச் சென்ற மக்கள் அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் கருத்தத் தெரிவித்த போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர், வடகிழக்கிலே தமிழர்களுக்கு பாரி அச்சுறுத்தலாக வன பாதுகாப்புத் திணைக்களமும் தொல்லியல் திணைக்களமும் காணப்படுவதாக தெரிவித்தார்.

வடகிழக்கிலே பௌத்தமயமாக்கலை உருவாக்கி, இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை அரசாங்கம் தோற்றுவிப்பதாகவவும் அவர் கூறியுள்ளார்.