இலங்கைக்குள் போதைப்பொருட்களைக் கொண்டுவர வாய்ப்பு இல்லை – பாதுகாப்பு பிரதி அமைச்சர்

‘போதைப்பொருள் இல்லாத நாடு – ஆரோக்கியமான வாழ்க்கை’ என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப செயற்படுத்தப்பட்ட ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டத்தின் மூலம் போதைப்பொருள் தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தீவிரமான முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டிற்குள் போதைப்பொருட்களைக் கொண்டுவர வாய்ப்பு இல்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தென் கடற்பரப்பில் மீன்பிடிப் படகிலிருந்து நேற்று வியாழக்கிழமை (20) கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிலையில் அதனை பார்வையிடுவதற்காக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ‘போதைப்பொருள் இல்லாத நாடு – ஆரோக்கியமான வாழ்க்கை’ என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப செயற்படுத்தப்பட்ட ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டத்தின் மூலம் போதைப்பொருள் தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தீவிரமான முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டிற்குள் போதைப்பொருட்களைக் கொண்டுவர வாய்ப்பு இல்லை. சட்டவிரோத மற்றும் சமூக சீரிகேடான நடவடிக்கைகளில் இருந்து விலகவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.