நேற்றைய தினம் (20) அவசர அவசரமாக மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய சூழலில் போடப்பட்ட தொல்பொருள் திணைக்கள அறிவித்தல் பலகை.
மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பெருநிலத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வரலாற்றுப் புகழ்மிக்க தாந்தாமலை முருகன் ஆலயத்திற்குச் செல்லும் வீதிகளில் இரு இடங்களில் நேற்று 20/11/2025, பிற்பகல் 01.30 மணியளவில் தொல்பொருள் திணைக்களத்தால் அறிவித்தல் பலகை இடப்பட்டுள்ளது .
அதில் தாந்தாமலை தொல்லியல் இடம் என மூன்று மொழிகளாலும் எழுதப்பட்ட அறிவித்தல் பலகை தாந்தாமலை செல்லும் நாப்பதுவட்டை சந்தி எனும் இடத்தில் தாந்தாமலை முருகன் ஆலயத்தை அம்புக்குறி காட்டி போடப்பட்டதுடன் மற்றைய அறிவித்தல் பலகை தாந்தாமலை முருகன் ஆலயத்திற்க்கு அண்மையில் உள்ள பொலிஸ் நிலைய சந்தியில் தாந்தாமலை முருகன் ஆலயத்தை அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ளது.
திருகோணமலையில் அத்துமீறி கடந்ந 2025, நவம்பர்,16, ல் புத்தர் சிலை வைக்கப்பட்டு அந்த சர்ச்சை முடிவதற்குள் மூன்று தினங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்தேறியுள்ள இச்சம்பவத்தின் பின்னணி என்ன என மக்கள் சந்தேகிக்கின்றனர்.
இவ்வாறு விளம்பரப் பலகையிடப்பட்டு தாந்தாமலை எனும் தமிழரர்களின் பூர்வீக நிலத்தில்
தொல்பொருள் ஆய்வு எனும் போர்வையில் பௌத்த விகாரைகளை நிறுவும் திட்டத்தின் ஆரம்ப அறிகுறியா இந்த விளம்பர அறிவிப்பு எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.



