நல்லூரில் மாவீரர் நினைவாலயம்!

நல்லூர் மாவீரர் நினைவாலயம் நாளை திறப்பு! | Seithy.com - 24 Hours Tamil News  Service, World's largest daily tamil news,tamil breaking  news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam  | www ...

தாய்மண்ணின் விடியலுக்காக வித்தாகிப் போனவர்களின் நல்லூர் நினைவாலயம்  இன்றைய தினம் (21) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படும் என்று ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

இதன்படி மாலை 6 மணிக்கு குறித்த நினைவாலயம் அங்குரார்ப்பணம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்மண்ணுக்காக தம் உயிர்களை அர்ப்பணித்தவர்களுடன் மாமனிதர்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் மற்றும் பல ஆவணப்படுத்தல்களையும் கொண்டு இந்த நல்லூர் நினைவாலயம் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மாவீரர் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் குறித்த நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. “தலைமுறைகள் கடந்து வாழும் மாவீரச் செல்வங்களின் நினைவாலயத்திற்கு உங்கள் இளைய தலைமுறையினரையும் அழைத்து வந்து வரலாற்றினைக் கடத்துங்கள். உங்கள் மனப்பதிவுகளைப் பதிந்துவிட்டுச் செல்லுங்கள்” என ஏற்பாட்டுக் குழு பொதுமக்களிடம் கோரியுள்ளது.