பாலர் பாடசாலை காணி விகாரைக்குரியது என பௌத்த பிக்குகள் அராஜகம்

மொனராகலை – வெல்லவாய பிரதேசத்தில் பாலர் பாடசாலை நடத்தப்படும் இடம் கிங்கினி ராஜ விகாரைக்கு சொந்தமானது என பெளத்த பிக்குகள் தெரிவித்ததால் குறித்த பகுதியில் பதற்றசூழல் உருவாகியது.

வெல்லவாய பிரதேசத்தில் பாலர் பாடசாலை நடத்தப்படும் இடம் கிங்கினி ராஜ விகாரைக்கு சொந்தமானது என தெரிவித்து அப்பகுதிக்கு நேற்று (18) பிக்குகள் சென்றுள்ளனர்.

அங்கு சென்ற பிக்குகள் பாலர் பாடசாலை இடத்தைத் தாருங்கள் என உரிமை கோரி அப்பகுதி மக்களுடன் தர்க்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இடத்தை தரமுடியாது என பாலர் பாடசாலை உள்ள பிரதேசத்தை சேர்ந்த மக்கள் பலர் விவாதித்தனர். இதனால் பிக்குகளிற்கும் குறித்த மக்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு இறுதியில் மோதல் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதி முழுவதும் பதற்றசூழல் உருவாகியது.

இதனையடுத்து இன்று வெல்லவாய பிரதேசத்திற்குச் சென்று பிக்குகள் மக்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளமை மக்களிடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.