திருகோணமலைக்கு வெளியே இருந்து வந்த சிறு குழுவொன்று திருகோணமலைக்குள் இனவாத மோதலை ஏற்படுத்த முயற்சித்தனர். இனவாத தீயால் எரிந்து இன்னும் அந்த காயங்களால் துடித்துக்கொண்டிருக்கும் திருகோணமலை மக்கள், அந்த முயற்சியை ஒன்றாக சேர்ந்து தோற்கடித்தனர். எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே நாம் இந்த தீயை அணைப்பதற்காக போராடினோம். எங்கள் ஆட்சியின் கீழ் மீண்டும் இனவாதம் என்ற தீயை எரிய அல்லது அதனை பயன்படுத்த ஒருபோதும் இடம் கொடுக்கமாட்டோம் என திருகோணமலை மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தெரிவித்தார்.
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தையடுத்து திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சம்பந்தப்பட்ட பௌத்த துறவிகள், காவல்துறையினர், உள்ளிட்டவர்களுடனான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (18) ரொஷான் அக்மீமன தலைமையில் இடம்பெற்றது.
இந்த கலந்துரைாடலின் பின்னரே பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.



