பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இதனூடாக தேசிய சட்டமன்றத்தின் ஓய்வூதியச் சட்டம் முற்றிலுமாக இரத்து செய்யப்படும்.
இந்தப் புதிய சட்டமூலத்தின் முக்கிய நோக்கம், பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் தற்போது அனுபவிக்கும் ஓய்வூதிய உரிமையை ஒழிப்பதாகும்.
அரசாங்கத்தின்கொள்கை அறிக்கையை ஆதரித்த மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை இரத்து செய்வதற்கான கொள்கை ரீதியான ஒப்புதல் கடந்த ஜூன் 16 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டமைடமை குறிப்பிடத்தக்கது.



