அமெரிக்காவுடன் வரி தொடர்பாக இறுதி உடன்பாடு எட்டவில்லை : இலங்கை அறிவிப்பு

அமெரிக்காவுடன் பரஸ்பர வரிகள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு இலங்கை இதுவரையில் இறுதி உடன்பாட்டை எட்டவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  அதன்படி, இலங்கைக்கும், அமெரிக்காவிற்கும் இடையில் இதுவரையில் 17 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாக, பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ளார்.

குறித்த பேச்சுவார்த்தைகள் ஊடாக இலங்கைக்கான வரிகளை 44 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைக்க முடிந்ததுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.