பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகரிப்பு!

கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 2,183 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவற்றில், 1,488 முறைப்பாடுகள் குடும்ப வன்முறை சம்பவங்கள் தொடர்பானவை ஆகும்.பெண்களுக்கு எதிராக இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க 1938 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் எனவும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.