பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக இரத்துச்செய்யவேண்டும் என சர்வஜன நீதி அமைப்புக் கோரியுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையையும், வரைவுச் சட்டமூலத்தையும் நீதி அமைச்சரிடம் கையளித்துள்ள நிலையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேற்கூறிய அறிக்கையும் தயாரிக்கப்படவுள்ள சட்டவரைவும் பகிரங்கப்படுத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கைக் கடிதத்தில் பேராசிரியர் ஜெயதேவா உயங்கொட கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன, எரான் விக்கிரமரத்ன, ஏ.எம்.பாயிஸ். ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்தி ரன். நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், பவானி பொன்சேகா, நடிஷானி பெரேரா, ஜெருஷா க்ரொசெட்தம்பையா, ஸ்வஸ்திகா அருலிங்கம், ரவீந்திரன் நிலோஷன், பெனிஸ்லோஸ் துஷான் ஆகியோர் கையெழுத்திட்டனர்.



