”தமிழ் மக்களுக்கு இந்த அரசாங்கம் துரோகத்தை இழைத்துள்ளது” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அகற்றிய போது, சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை. என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திங்கட்கிழமை (17) தனது பாராளுமன்ற உரையில் கருத்து தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துரைக்கையில்…

திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை ஞாயிற்றுக்கிழமை (16) அகற்றிய போது, சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை. ஏனெனில், இனவாதத்தையும் மதவாதத்தையும் நீக்குவதாக நீங்கள் சொன்னதை நம்பி அவர்கள் உங்களுக்கே வாக்களித்திருந்தார்கள்.

இங்கிருக்கும் திருமலைக்கான தமிழ் பாராளுமன்ற உறுப்பினரையும் அவர்கள் தெரிவு செய்திருந்தார்கள். நீங்கள் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எடுத்த நடவடிக்கையை எதிர்த்ததெல்லாம், சிங்கள காடையர்கள் மட்டுமே!!

அதைக்கண்டு நீங்கள் உண்மையில் பின்வாங்கியிருக்கக்கூடாது, அந்த இனவாத மதவாத காடைத்தனத்தை கண்டு பின்வாங்கியிருந்திருக்ககூடாது.

உண்மையில் நீங்கள் என்ன செய்திருக்கவேண்டுமெனில் , மக்களிடம் சென்று எது சரி எது பிழை என்பதை, எப்படியான் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை  நேர்மையுடன் சொல்லியிருந்திருக்கவேண்டும்.

ஆனால்  அதற்கு பதிலாக நீங்கள் இப்போது செய்ததெல்லாம், நீங்கள் (இனவாதிகள் இல்லை என) சொன்னதை நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கும் உங்களுக்கு வாக்களித்த  சிங்களரல்லாத  வாக்களருக்கும் முழுமையான தூரோகத்தை இழைத்திருக்கிறீர்கள்.

என, நீதி அமைச்சு மீதான விவாதத்தின் போது திருமலை சட்ட விரோத விகாரை அமைப்பு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றில் உரையாற்றினார்.