ஈழத்து துயிலும் இல்லங்களும்!   எழுச்சி கூறும் கார்த்திகை 27ம்!  : பா. அரியநேத்திரன்

1982 கார்த்திகை 27ல் விடுதலைப்புலிகளின் முதலாவது மாவீரரான யாழ்ப்பாணம் வடமாரா ட்சி கம்பர்மலையை சேர்ந்த செல்வச்சந்திரன் சத்தியநாதன் எனும் இயற்பெயரையும் சங்கர் என்ற இயக்கத்தின் பெயரையும் கொண்ட மாவீரன் சாவைத்தழுவிய நாளே மாவீரர் நாளாகும்.
அவர் வீரச்சாவை தழுவி சரியாக ஏழு வருடங்கள் கடந்த நிலையில் இந்தியப்படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் இடம்பெற்ற காலத்தில்தான் முதலாவது மாவீரர் நாள்  1989 கார்த்திகை 27 அன்று வன்னி  நிலப்பரப்பின் அடர்ந்த காட்டுப் பகுதியில் தமிழீழத் தேசியத் தலைவரால் முதலாவது விடு தலைப்புலிகளின் மாவீரரான லெப்டினன்ட் சங்கர் அவர்களின் வீரச்சாவு நாளான “கார்த்திகை 27ஐ மாவீரர் நாளாக பிரகடனப் படுத்தி உரையாற்றினார் 1989ல் 1307 மாவீரர்கள் வீரச்சாவை தழு வியிருந்தனர். அந்த முதலாவது மாவீரர் உரையில் தலைவர் வே.பிரபாகன் கூறியது.
“எமது போராட்டத்தில் இன்று ஒரு முக்கியமான நாள். இதுவரை காலமும் எமது புனித இலட்சியமான தமிழீழ இலட்சியத்துக்காக உயிர்த்தியாகம் செய்த 1307 போராளிகளை நினைவு கூரும் முகமாக இந்த மாவீரர் நாளை முதல் முறையாக இன்று ஆரம்பித்துள்ளோம். எத்தனையோ உலக நாடுகளில் அந்த நாடுகளின் விடுதலைக்காக போரிட்ட படை வீரர்களின், பாதுகாப்புக்காகப் போரிட்ட படைவீரர்களின் நினைவாகவும் இப்படிப் பட்ட மாவீரர் நாட்களைக் கொண்டாடுவது வழக்கம். உங்களுக்குத் தெரியும் இதுவரை காலமும் எமது இயக்கத்தில் வீரச் சாவடைந்த ஒவ்வொரு போராளிக்குமாகத் தனிப் பட்ட நினைவு நாட்களைக் கொண்டாடுவது வழக் கம்.
ஆனால் 1989ல் இந்த வருடத்திலிருந்து வீரச்சாவடைந்த எல்லோரையும் மொத்தமாக வருடத்தில் ஒரு நாள் நினைவு கூர்ந்து அந்த நாளையே “மாவீரர் நாள்” ஆகப் பிரகடனப் படுத்தியுள்ளோம். அதற்கு இன்னுமொரு காரண மும் உண்டு. எங்களது விடுதலைப் போராளிகளில் முதலாவதாக வீரச்சாவு அடைந்த “சங்கரின்” நினைவு தினமான இன்று அந்த மாவீரர் நாளை நாங்கள் பிரகடனப்படுத்தியுள்ளோம்.
அத்தோடு வழமையாக எங்கள் மக்களில் ஒரு பழக்கம் உண்டு. உயர்ந்த பதவிகள் வசதி யானவர்கள் இப்படிப்பட்டவர்களைத் தான் பெரிதாகப் பார்க்கும் பழக்கம் உண்டு. அது போல எமது விடுதலைப் போராட்டத்திலும் தலைவர்களை மட்டும் பிரித்து அவர்களது செய்கைகளை மட்டும் பெரிதாகப் பார்க்கக் கூடாது என்பதற்காகவும் எல்லாப் போராளிகளும் சமம் எனும் ஓர் நோக்கத்துடனும் இந்த நாளை நாம் நினைவுகூர முடிவு செய்துள்ளோம்” என அந்த உரையில் குறிப்பிட்டிருந்தார்.
1989 கார்திகை,27 தொடக்கம் 2008, கார்த் திகை 27 வரை விடுதலைப்புலிகளின் தலைவர், மாவீரர் தினத்தில் பிரதான சுடர் ஏற்றி மாவீரர் தின உரை நிகழ்த்தியுள்ளார்.2009 கார்திகை 27 தொடக்கம்எதிர்வரும் 2025  கார்திகை 27 வரை 17 மாவீரர்தினங்கள் தலைவரின் உரையின்றி பொதுமக்களாலும், முன்னாள் போராளிகளாலும், சில தமிழ்தேசிய கட்சி உறுப்பினர்களாலும் வடகிழக்கில் உள்ள இராணு வம் இல்லாத துயிலும் இல்லங்களிலும் பொது இடங்களிலும் தொடர்சியாக செய்து வருகின்றனர்.அதேபோல் புலம் பெயர் தேசம், மத்தியகிழக்கு நாடுகள், தமிழ்நாடு உட்பட உலகத்தமிழர்கள் வாழும் இடமெலாம் தொடர்ச் சியாக மாவீரர்களை நினைவு கூருவது இடம் பெற்று வருகிறது.
வடகிழக்கில் 2008 வரை 27 துயிலும் இல்லங்கள் இருந்தபோதும் இறுதியுத்த காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேலும் 06, துயிலும் இல்லங்கள் ஆரம்பிக்கப்பட்டு மொத்தமாக 33 துயிலும் இல்லங்கள் இப்போது உள்ளன.
மாவீரர் துயிலுமில்லங்கள் விபரம் :-
யாழ்ப்பாணம் மாவட்டம்:
1)சாட்டி தீவகம்  துயிலுமில்லம்.
2)கோப்பாய் துயிலுமில்லம்,
3)எல்லங்குளம் துயிலுமில்லம்,
 4)கொடிகாமம்்துயிலுமில்லம்,
5)உடுத்துறை துயிலுமில்லம்.
கிளிநொச்சி மாவட்டம்.
 6)கனகபுரம் துயிலுமில்லம்,
7)விசுவமடு  துயிலுமில்லம்,
 8)முளங்காவில் துயிலும் இல்லம்.
முல்லைத்தீவு மாவட்டம்:
9)முள்ளியவளை துயிலுமில்லம்,
10)அலம்பில் துயிலுமில்லம்,
 11)ஆலங்குளம்   துயிலுமில்லம்,
12)வன்னிவிளாங்குளம் துயிலுமில்லம்,
13)களிக்காடு (நெடுங்கேணி) துயிலுமில்லம்.
மன்னார் மாவட்டம்.
14)ஆட்காட்டிவெளி் துயிலுமில்லம் ,
15)பண்டிவிரிச்சான்  துயிலுமில்லம்
வவுனியா மாவட்டம்.
16)ஈச்சங்குளம்்துயிலுமில்லமும் மணலாறு பிரதேசம்.
17உதயபீடம் (டடி முகாம்) துயிலுமில்லம்,
18)இதயபீடம் (ஜீவன் முகாம்) துயிலுமில்லம்
திருகோணமலை மாவட்டம்.
19)ஆலங்குளம் துயிலுமில்லம்,
20)தியாகவனம்
21)பெரியகுளம் துயிலுமில்லம்,
22)உப்பாறு  துயிலுமில்லம்.
மட்டக்களப்பு மாவட்டம்.
23)தரவை துயிலுமில்லம்,
24)தாண்டியடி துயிலுமில்லம்,
25)வாகரை கண்டலடி துயிலுமில்லம்,
26)மாவடிமுன்மாரி துயிலுமில்லம்.
அம்பாறை மாவட்டம்.
27)கஞ்சிகுடியாறு  துயிலுமில்லம்
மொத்தமாக இந்த 27 துயிலும் இல்லங்கள் மட்டுமே 2008 இறுதிவரை இருந்தது. ஆனால் போர் உக்கிரமான போது அமைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் மேலும் ஆறு துயிலும் இல்லங் கள் அமைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது
அதனால்
28)தர்மபுரம்  துயிலுமில்லம்,
29)சுதந்திரபுரம் துயிலுமில்லம்.
30இரணைப்பாலை துயிலுமில்லம்.
31)பச்சைப்புல்வெளி துயிலுமில்லம்.
32)கரையா முள்ளிவாய்க்கால் துயிலுமில்லம்.                                                                                                   33)வெள்ளா முள்ளிவாய்க்கால் துயிலுமில்லம்.
ஆகிய ஆறு துயிலும் இல்லங்களும் 2008, தொடக்கம் இறுதிப்போர் 2009, மே,18 வரை அமைக்கப்பட்டன.    எல்லாமாக மொத்தம் 33, துயிலும் இல்லங்களில் இதுவரை ஏறக்குறைய ஐம்பதாயிரம் மாவீரர்களின் கல்லறைகள் உள் ளதாக கூறப்படுகிறது.
2005ல் விடுதலைப்புலிகளால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்ட துயிலும் இல்லங்க ளில் உள்ள கல்லறைகள் விபரம்.
வடமாகாணம்:
1)விசுவமடு – 2728. கல்லறைகள்.
2)முள்ளியவளை –  2575,கல்லறைகள்.
3)கிளிநொச்சி – 1963 .கல்லறைகள்.
4)வன்னிவிளாங்குளம் – 856 .கல்லறைகள்.
5)ஆலங்குளம் – 663 .கல்லறைகள்.
6)முழங்காவில் – 959 .கல்லறைகள்.
7)ஆட்காட்டிவெளி – 660 .கல்லறைகள்.
8)பண்டிவிரிச்சான் – 272 .கல்லறைகள்.
9)அளம்பில் – 147 .கல்லறைகள்.
19)உடுத்துறை –  214 .கல்லறைகள்.
11)கோப்பாய் –  1832 .கல்லறைகள்.
12)சாட்டி – 154 .கல்லறைகள்.
13)கொடிகாமம் –  968 .கல்லறைகள்.
14)எள்ளங்குளம் – 795 .கல்லறைகள்.
15)ஈச்சங்குளம் – 707 .கல்லறைகள்.
16)மணலாறு – 81 .கல்லறைகள்.
17)டடிமுகாம் – 90 .கல்லறைகள்.
கிழக்குமாகாணம்:
18)தரவை, மட்டக்களப்பு-2452 .கல்லறைகள்.
19)தாண்டியடி,மட்டக்களப்பு-485.கல்லறைகள்.
20)கண்டலடி வாகரை,மட்டக்களப்பு –  284.கல்ல றைகள்.
21)மாவடி முன்மாரி, மட்டக்களப்பு – 62.கல்லறை கள்.
22)கஞ்சிகுடிச்சாறு, அம்பாறை-686.கல்லறைகள்.
23)ஆலங்குளம், திருகோணமலை-262.கல்லறை கள்.
25)பெரியகுளம், திருகோணமலை– 65.கல்லறை கள்.
26)தியாகவனம், திருகோணமலை – 35.கல்லறை கள்.
மொத்தம் இருபதாயிரம் (20000) கல்லறை கள். (விடுதலைப்புலிகள் மாவீரர் பணிமனையால் 2005,நவம்பரில் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் இருந்து பெறப்பட்டவை).
2005, கார்த்திகை27, தொடக்கம் 2009,மே,18, வரை மாவீர்ர்களின் உத்தியோகபூர்வ விபரம் தெரியாவிட்டாலும் ஏறக்குறைய முப்பதாயிரம் மாவீர்கள் இந்த நான்கு வருடங்களில் வீரமரணம் அடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது..
இதேவேளை தற்போதும் பத்து துயிலும் இல்லங்களில் இராணுவமுகாம்கள் உள்ளன.
அவை..
மட்டக்களப்பு மாவட்டம்:
தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லம்.
யாழ்ப்பாணம் மாவட்டம்:
கொடிகாமம் துயிலும் இல்லம்,
எள்ளாங்குளம் துயிலும் இல்லம்,
கோப்பாய் துயிலும் இல்லம்
வவுனியா மாவட்டம்:
ஈச்சங்குளம் துயிலும் இல்லம்
முல்லைத்தீவு மாவட்டம்:
தேராவில் துயிலும் இல்லம்,
முள்ளியவளை துயிலும் இல்லம்
அடம்பன் துயிலும் இல்லம்,
துணுக்காய் துயிலும் இல்லம்,
ஆலங்குளம் துயிலும் இல்லம்.
கடந்த 15 வருடங்களாக துயிலும் இல்லங்க ளில் நினைவுகள் செய்வதற்கு பூரணமான அனுமதி இருக்கவில்லை நல்லாட்சி அரசின் காலத்தில் துயிலும் இல்லங்களில் நினைவுகூர அனுமதி உண்டு என பிரதமர் ரணில் ஜனாதிபதி மைத்திரி கூறியபோதும் சில துயிலும் இல்லங்களில் படையினர் தடுத்து கெடுபிடி செய்த வரலாறே காணப்பட்டது.
நீதிமன்ற தடை உத்தரவுகள் மஞ்சள் சிவப்பு கொடிகட்டவிடாமல் தடுத்த சம்பவங்கள் எல்லாம் கிழக்கில் உள்ள குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்டன.
ஆனால் என்னதான் தடைகள் இராணுவ அச்சுறுத்தல்கள் இருந்தபோதும் அவைகளுக்கு முகம் கொடுத்து கிழக்கு மாகாணத்தில் துயிலும் இல்லங்களில் நினைவுச்சுடர்கள் கார்த்திகை 27, மாலை 6.5, மணிக்கு ஏற்றப்பட்டதே வரலாறு.
எதிர்வரும் 2025, நவம்பர்,27, ல் தற்போதைய தேசிய மக்கள் அரசு அனுமதிதந்தாலும் தராவிட்டா லும் துயிலும் இல்லங்களில் நினைவுச்சுடர்கள் வழமை போன்று ஏற்றப்படும்.
ஆனால் அமைச்சர் சந்திரசேகரம் மாவீரர்களை நினைவு கூர தடையில்லை என கூறியுள்ளார். இனப்படுகொலைக்காக உயிர்நீத்த பொது மக்கள், இனவிடுதலைக்காக போராடி ஆகுதியான மாவீரர்கள் அனைவரையும் அந்தந்த தினங்களில் நினைவுகூருவது எல்லாத்தமிழர்களு டைய கடமை யும் உணர்வும் இதற்கு எவரிடமும் அனுமதி பெறத்தேவையில்லை குறிப்பாக ஆட்சி யாளர்களி டம் அனுமதி எதிர்பார்த்து கடந்த 16, வருடங்களாக எந்த ஒரு நினைவு தினத்தையும் ஈழத்தமிழர்கள் அனுசரித்த வரலாறுகள் இல்லை என்பதையே கடந்த 16, வருடங்களாக ஈழத் தமிழர்கள் நிருப் பித்துள்ளனர்.