சிறிதரனுக்கு எதிரான முறைப்பாடு குறித்த விசாரணைகள் ஆரம்பம்!

இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக முறைப்பாட்டை முன்வைத்த சிவில் அமைப்பின் சஞ்சீவ மஹவத்தவிடம் 6 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்துள்ளதாகக் கூறியே பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக, கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் விசாரணைகளை எதிர்கொள்ள தயார் என்றும் தெரிவித்துள்ளார்.