புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு : ஏகமனதாக நிறைவேற்றம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான  அமர்வு தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றது.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இடம்பெற்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆளுகையில் உள்ள இந்த சபையின் முதலாவது பாதீடாக இது அமைந்திருந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வருமானம் கூடிய சபைகளில் ஒன்றாக காணப்படுகின்ற இந்த சபையின் உடைய பாதீடு இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில்   உறுப்பினர் ச.சத்தியசுதர்சன் அவர்களால் ஏற்கனவே சின்னச்சாளம்பன் பகுதியில் மயானத்துக்கு செல்லும் பாதையில் பாலம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்ற பிரேரணை அனைத்து உறுப்பினர்களினதும் ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு இதற்கு வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான நிதி ஏன் ஒதுக்கப்படவில்லை என வினா எழுப்பப்பட்ட தை தொடர்ந்து சபையில் அமைதியின்மை ஏற்ப்பட்டது இதையடுத்து  உறுப்பினர்  ச.சத்தியசுதர்சன் சபையில் இருந்து வெளியேறிச் சென்றார்.

இதனை தொடர்ந்து ஏனைய உறுப்பினர்களால் சபையில் பாதீடு ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.