2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி நாடு முழுவதும் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின்போது தமது வீடுகள் தீக்கிரையானமைக்காக, சட்டத்திற்கு முரணாக நஷ்ட ஈட்டுப் பணத்தைப் பெற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து அந்த நஷ்ட ஈட்டுத் தொகையை மீண்டும் அறவிடுமாறு உத்தரவொன்றைப் பிறப்பிக்கக் கோரி அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவை, ஜனவரி 28ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.
சட்டத்தரணியான கலாநிதி. ரவீந்திரநாத் தாபரெவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணையின் போது, சட்டவிரோதமாக இழப்பீடு பெற்ற முன்னாள் மக்கள் பிரதிநிதிகளின் நிலைப்பாடு குறித்து ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



