சமூக மேம்பாட்டுக்கான இரண்டாவது உலக உச்சி மாநாடு : நிஷா பீரிஸ்

கட்டார் நாட்டின் தோஹாவில் நடைபெற்ற “இரண்டாவது உலக சமூக மேம்பட்டு உச்சிமாநாடு (Second World Summit for Social Development)” உலகளாவிய அளவில் வறுமை, பசி, சமூக நீதி ஆகியவற்றை மீண்டும் முன்வைத்த முக்கிய அரங்காக அமைந்தது.
இந்த மாநாட்டில் ஈழத் தமிழர்களின் நிலைமை மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகளை உலகத் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றவர் திருமிகு நிஷா பீரிஸ் அவர்கள். இந்நேர்காணல், தோஹா மாநாட்டில் அவரது பங்களிப்பு மற்றும் ஈழத் தமிழர்களுக்கான சமூக, அரசியல் மற்றும் மனிதநேயக் கோணங் களை மையமாகக் கொண்டு அமைந்தது. உலக அரங்கில் தமிழ் இனத்தின் குரல் எவ்வாறு முன்னெடுக்கப்படுகிறது என்பதை வெளிப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
கேள்வி:
நீங்கள் தற்போது கட்டார் தோஹாவில் நடைபெறும் சமூக மேம்பாட்டுக்கான இரண்டா வது உலக உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு ள்ளீர்கள். இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் என்ன? இதில் ஈழத் தமிழர்களுக்கு ஏதாவது பயன் இருக்கிறதா?
பதில்:
ஆம், இது “இரண்டாவது உலக சமூக மேம்பட்டு உச்சிமாநாடு (Second World Summit for Social Development)” ஆகும். இது 1995ஆம் ஆண்டில் டென்மார்க்கின் தலைநகரான கோப்பன்ஹேகனில் நடைபெற்ற முதலாவது மாநாட்டிற்கு பின்னர், 30 ஆண்டுகளுக்கு பிறகு உலகம் மீண்டும் இதை நோக்கி திரும்பிப் பார்க்கிறது. அந்த மாநாட்டில் வறுமை ஒழிப்பு, முழு நேர வேலைவாய்ப்பு, சமூக ஒற்றுமை ஆகிய மூன்று முக்கிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. ஆனால் காலப்போக்கில் உலகின் முன்னுரிமைகள் மாறின. 2001இல் ஏற்பட்டது “போர் எதிர்ப்பு” (War on Terror) சூழ்நிலை; பின்னர் காலநிலை மாற்றம் மற்றும் கோவிட் தொற்று போன்ற காரணங்களால் அவை சில அளவில் தள்ளிப்போயின. இப்போது ஐ.நா. நிலைத்த வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals) என்ற வடிவில் இவ்விலக்குகள் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன.
கேள்வி:
இந்த மாநாட்டில் பேசப்பட்ட முக்கிய அம் சங்கள் என்னென்ன?
பதில்:
இந்த உச்சிமாநாட்டின் மையக்கரு வறுமை யின்மை மற்றும் பசியின்மையை அடிப்படையாகக் கொண்டது. நிலைத்த வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals) அடிப்படையில் வறுமையற்ற உலகம் (No Poverty) மற்றும் பசியற்ற உலகம் (Zero Hunger) ஆகியவை முன்னிலையாக வைக்கப்பட்டன. மேலும் நல்ல கல்வி, சுகாதாரம், தூய நீர், சமாதானம், நீதி மற்றும் வலுவான நிறுவனங்கள் (Peace, Justice and Strong Institutions) பற்றிய விவாதங்களும் இடம்பெற்றன. நான் குறிப்பாக SDG 16 — சமாதானம், நீதி மற்றும் வலுவான நிறுவனங்கள் (Peace, Justice and Strong Institutions) குறித்து கவனம் செலுத்தினேன்.
கேள்வி:
இந்த நிகழ்வில் ஈழத் தமிழர்களின் பங்கேற்பு எவ்வாறு இருந்தது?
பதில்:
துரதிஷ்டவசமாக, ஈழத் தமிழர்களின் பங்களிப்பு மிகக் குறைவாக இருந்தது. நான் கலந்து கொண்டபோது, அரசு சார்பற்ற அமைப்பு களிலிருந்தும் சில பிரதிநிதிகள் மட்டுமே இருந்தனர். சில இந்தியத் தமிழரும், தலித் பிரச்சினைகளை எடுத்துரைப்பவர்கள் சிலர் கலந்து கொண்டிருந்தனர். ஆனால் நேரடியாக ஈழத் தமிழர்களின் அரசியல் அல்லது சமூக பங்கேற்பு குறிப்பிடத்தக்கதாக இல்லை—இது வருத்தமளிக்கிறது.
கேள்வி:
உலகளாவிய நிலைப்பாட்டில் இந்த மாநாட்டின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
பதில்:
இந்த மாநாடு முடிவல்ல; தொடக்கமே என்று பலர் கூறியுள்ளனர். வறுமை, பசி போன்ற அடிப்படை பிரச்சினைகளை உலகளாவிய ரீதியில் அணுகுவது அவசியம். சுப்பிரமணிய பாரதியார் கூறியபடி, “ஒரு மனிதனுக்கு உணவு இல்லை என்றால், ஜகத்தை அழிக்கத்தக்க நிலை அதிகரிக்கும்” என்றஉணர்வு இன்று உலகம் முழுதும் மீண்டும் பேசப்படுகிறது. இந்த சிந்தனைகள் வாயிலாகவே உலகளாவிய தீர்வுகள் உருவாகும் என்று நான் நம்புகிறேன்.
கேள்வி:
இந்த மாநாட்டில் ஈழத் தமிழர்களின் நிலைமை குறித்து நீங்கள் கூறிய முக்கியக் கருத்து கள் என்ன?
பதில்:
நான் ஈழத் தமிழர்களின் நில அபகரிப்பு, வறுமை மற்றும் சமூக முன்னேற்றம் குறித்து வலியுறுத்தினேன். இலங்கையில் தற்போது “சமூக மேம்பாடு” என்ற பெயரில் நடைபெறும் நில அபகரிப்புகள் உண்மையான சமூக மேம்பாடு அல்ல என்று நான் எடுத்துரைத்தேன். குறிப்பாக மன்னாரில் காற்றாலை (wind-farm) திட்டங்கள் நிறுவப்பட்டு உள்ளதால் உள்ளூர் மக்கள் தங்கள் நிலத்தை இழந்து வருகின்றனர் — இது சமூக மேம்பாட்டாக கருதுவதற்கு இயலாது. எனவே, இத்தகைய அங்கங்களில் ஈழத் தமிழர்களின் குரல் நிரூபிக்கப்பட வேண்டும் என்றே என் வலியுறுத்தல்.
கேள்வி:
அங்கு முக்கிய உலகத் தலைவர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்ததா?
பதில்:
ஆம் பல தலைவர்களுடன் சந்திப்புகள் நிகழ்ந்தன. முதலில் ஐக்கிய நாடுகளின் பொது செயலகம் தலைவர் ஆண்டோனியோ குத்தெரெஸ் (António Guterres) அவர்களின் உரையை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது; அவர் உலக மக்கள் தொகையில் சுமார் 9% பேர் இன்னும் மிகுந்த வறுமையில் வாழ்கின்றனர் என குறிப்பிட்டார். நான் அவரை நேரடியாகப் பெற முடியவில்லை, ஆனாலும் பலர் அவரின் மேடையில் பேசும்போது ஈழத் தமிழர் பிரச்சினைகளை எடுத்துரைக்கும்படி வாய்ப்பை பயன்படுத்தினேன்.
கேள்வி:
நீங்கள் வழங்கிய ஆவணங்கள் பற்றி சொல்ல முடியுமா?
பதில்:
நாங்கள் “தமிழீழம் மற்றும் இலங்கை ஆக்கிரமிப்பு தொடர்பான செயற்பாட்டு திட்டத் தின் உருவாக்கம் மற்றும் நடைமுறைப்படுத் தலுக்கான வேண்டுகோள் (Appeal for the Development and Implementation of a Program of Action for the Tamil Eelam and Sri Lankan Occupation)” என்ற அறிக்கையை வழங்கினோம். இதில் “இலங்கை ஆக்கிரமித்த தமிழீழப் பகுதியில் உள்ள பகுதிகள் (Occupied Territories of Tamil Eelam by Sri Lanka)” என்ற சொல்லாட்சியை பயன்படுத்தியுள்ளோம். பலஸ்தீனில் எவ்வாறு நிலத்தைக் கோரும் முயற்சிகள் நடைபெற்றனவோ, அதே போல் தமிழீழத்தையும் ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட நிலப் பரப்பாக அடையாளப்படுத்த வேண்டும் என்று நாம் கோரினோம். இந்த எட்டு பக்க அறிக்கையை மலாவி, ஜெர்மனி, கனடா உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகளிடம் அளித்தேன்.
கேள்வி:
இந்த அறிக்கையில் எடுத்துரைக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
பதில்:
அறிக்கை தற்போதைய தமிழீழத்தின் அரசி யல், பொருளாதார மற்றும் சமூக நிலைகளை சுட்டிக்காட்டியது. அதில் மிலிட்டரிசேஷன் (militarisation), மனித உரிமை மீறல்கள், மொழி புறக்கணிப்பு, புத்தமத நினைவுச்சின்னங்களின் கட்டுமானம், செம்மணி போன்ற இடங்களில் நடைபெறும் மீறல்கள் ஆகியவைகள் குறிப்பிடப் பட்டன. இவை அனைத்தும் சமூக மேம்பாட்டுக்கு மிகப்பெரிய தடையாக செயல்பட்டு வருகின்றன என்பதை நாம் வலியுறுத்தினோம்.
கேள்வி:
இலங்கை அரசின் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றார்களா?
பதில்:
அவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந் தாலும், நான் நேரடியாக அவர்களை இங்கே சந்திக்கவில்லை. சில அரசு சார்பற்ற அமைப்புகள் மட்டும் வந்திருந்தன. இது இலங்கை அரசு இந்த மாநாட்டை குறைந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவோ, அல்லது கடந்த இனப் படுகொலைகளை மறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கக்கூடும் எனவும் தோன்றியது.
கேள்வி:
நீங்கள் சந்தித்த முக்கிய அரசியல் நபர்கள் யார்?
பதில்:
ஆப்ரிக்கன் யூனியன் (African Union) கமிஷனர் அமோகா, மலாவி வெளிவிவகார அமைச்சர், தென் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் இந்தியாவின் தொழிலாளர் அமைச்சர் போன்ற பலரைச் சந்தித்தேன். இந்திய மந்திரி கூறிய ஒரு வாக்கியம் — “இது உங்களுடைய பிரச்சினை மட்டும் அல்ல; இது எங்களுடைய பிரச்சினையும் ஆகும்” — என்கிறார்; அதுவே எனக்கு மிகவும் உணர்ச்சி ஊட்டிய தருணமாக இருந்தது.
கேள்வி:
இந்த மாநாட்டின் இறுதி முடிவுகள் பற்றி என்ன சொல்லலாம்?
பதில்:
வறுமை மற்றும் பசியை ஒழிப்பது என்ற இரண்டு முக்கிய இலக்குகள் மீண்டும் உறுதிப் படுத்தப்பட்டன. இருப்பினும் ஐ.நா. மூலம் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் அனைத்து நாடுகளிலும் முழுமையாக நடைமுறையில் அமல்படுத்தப்படுகிறதா என்பது ஒரு பெரிய சந்தேகம். 17 நிலைத்த வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals) சரியான பாதையில் சென்றிருக்கிறதா என்பது இப்போது மதிப்பீடு செய்யப்படுகின்றது. கோவிட் தொற்றுக்குப் பிறகு உருவான சூழ்நிலைகளின் காரணமாக உலகம் மீண்டும் தன் பாதையை ஆராய்ந்து கொண்டிருக்கிறது; இதுவே இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கமாகும்.
கேள்வி:
நீங்கள் இந்தியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களைச் சந்தித்தீர்கள். அதில் குறிப்பிடத்தக்க தருணம் எது?
பதில்:
இது உண்மையில் பல தருணங்களைக் கொண்டிருந்தது. குறிப்பாக இந்தியாவின் தொழி லாளர் அமைச்சருடன் நான் சந்தித்த பொழுது அவர் “இது உங்களுடைய பிரச்சினை மட்டும் அல்ல; இது எங்களுடைய பிரச்சினையும் ஆகும்” என்று கூறினார். அது எனக்கு மிகுந்த உறுதிமொழியாகக் கிடைத்தது. கென்யாவின் தொழிலாளர் அமைச் சருடன் நடைபெற்ற உரையாடலும் பயனுள்ளதாக இருந்தது; அவர் நமக்கு தெளிவான ஆதரவு மற்றும் நட்பு உறவை வலுப்படுத்துவார் என்று கூறி நம்பிக்கை விட்டார்.
கேள்வி:
பலஸ்தீன் (Palestine) பிரதிநிதிகளுடன் நடந்த உரையாடலைப் பற்றி சொல்ல முடியுமா?
பதில்:
பலஸ்தீனின் சமூக மேம்பாட்டுத் துறையின் ஒரு மந்திரியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் காசாவில் (Gaza) நடந்து கொண்டிருக்கும் கொடூர நிலையை உருக்கமாகக் கூறினார்கள். அவர்களும் நம்மைப் போன்றே இனப் போராட்ட அனுபவம் கொண்டவர்கள். நான் 1980கள், 1990கள் மற்றும் 2009இல் ஈழத்தில் நிகழ்ந்த துயரங்கள் நினைவுக்கு வந்ததை அவர்களிடம் தெரிவித்தேன்; அவர்கள் “நாங்களும் உங்களுக்கு துணையாக இருப்போம் (We will stand with you)” என்று கூறினர். அந்த உரையாடல் மிகவும் உண்மையான—a solidarity—உறவாக உணரப்பட்டது.
கேள்வி:
இந்த மாநாட்டில் ஜெர்மனிய பிரதிநிதிகளுட னான சந்திப்பு நடந்ததா?
பதில்:
ஆம். ஜெர்மனியின் தூதரை (German Ambassador) நான் சில நேரங்களில் நேரில் சந்தித்தேன்; அவர் மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் நடந் தார். புகைப்படம் எடுத்தபோது அவர் “உனக்காக நான் பணிபுரிகிறேன் (I will work for you)” என்று கூறினார். பின்னர் அவர் நமது அறிக்கையை அவருடைய குழுவிடம் பரிசீலிக்க இருப்பதாக தெரிவித்தார்; இதனால் சில நாடுகள் நம்முடைய பிரச்சினைகளுக்கு நேர்மையாக கவனம் செலுத்தக் கூடும் என்ற நம்பிக்கை உருவானது.
கேள்வி:
இந்த மாநாட்டில் முக்கியமான அமர்வுகள் அல்லது கலந்துரையாடல்கள் எவை?
பதில்:
“சமூக மேம்பாட்டின் மூன்று தூண்களை வலுப்படுத்தல் (Strengthening the Three Pillars of Social Development)” என்ற தலைப்பில் ஒரு ரவுண்ட் டேபிள் நடந்தது. அதில் மொன்டெனெக்ரோ ஜனாதிபதி ஜாகப் மிலாட்டோவிக் (Jakup Milatovic), கிர்கிஸ்தான், சிலி, நெதர்லாந்து, சுரினாம் போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் நாட்டின் சமூக சவால்களைப் பற்றி பேசியபோது, தமிழர்களின் அனுபவங்களுடன் பல ஒற்றுமைகள் காணப்பட்டன.
கேள்வி:
ஈழத் தமிழர்களின் பங்கும் அடையாளமும் குறித்து நீங்கள் கூறிய செய்தி என்ன?
பதில்::
உலக அரங்குகளில் நம்மை நமது இன அடையாளத்துடன் (as Tamils of Eelam) நிலை நிறுத்திக் காட்சிப்படுத்த வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். நமக்கு மத அடையாளங்கள் வெவ்வேறு இருந்தாலும் (Hindu, Christian, Muslim போன்ற), முதன்மையாக நாம் ஒரு இன அடையாளத்தை — ஈழத் தமிழன் — என்ற வகையில் உலகெங்கிலும் பேச வேண்டும். தமிழீழத்தை ஒரு தனி நிலப்பரப்பாக வலியுறுத்துவது அவசியம் எனும் என் நிலைப்பாடு இது.
கேள்வி:
சீனா மற்றும் கட்டார் (China & Qatar) இந்த மாநாட்டில் முக்கிய பங்கை வகித்ததாக கூறப்படுகின்றது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:
ஆம். 2030ஆம் ஆண்டிற்குள் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals) அடைவதற்காக சீனாவின் பங்கு முக்கியமாகும். கட்டார் நாடும் இந்த மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்தது. சிலர் கூறுகின்றனர், “இந்த செலவுகளை ஒரு நாட்டின் ஆதரவோடு வைத்து வறுமையைத் தீர்க்கலாம்” என்ற எண்ணம் வருகிறதோ என கூறப்பட்டாலும், இத்தகைய விவாதங்கள் உலகளாவிய பாசறைகளை உருவாக் குவதில் உதவியாகவே இருக்கும் என்றும் நான் கருதுகிறேன்.
கேள்வி:
இந்த மாநாட்டிற்கு பின் அடுத்த நிகழ்வுகள் என்ன?
பதில்:
நவம்பர் 24 முதல் 26 வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ள வணிகம் மற்றும் மனித உரிமைகள் மன்றம் (Business and Human Rights Forum) மற்றும் சிறுபான்மையினர் மன்றம் (Minority Forum) ஆகிய நிகழ்ச்சிகளில் நாங்கள் தொடர்ந்தும் பங்கேற்கவுள்ளோம். உலக அரங்கில் எங்கெல்லாம் கூட்டங்கள் நடைபெறுகின்றன, அப்போது ஈழத் தமிழர்களும் தங்கள் குரலை எழுப்ப வேண்டும் என்றே எங்கள் நோக்கம்.
கேள்வி:
நேர்காணலை நிறைவு செய்வதற்கு முன், நீங்கள் கூற விரும்பும் இறுதி செய்தி?
பதில்:
ஈழத் தமிழர்களின் அரசியல் இலக்குகளை நாங்கள் அடைவதற்காக எங்களை எல்லோருட னும் பேசி, நண்பர்களாக இணைந்து செயல்பட வேண்டும். எவரையும் பகைவராகக் கருதாமல், உலகத் துறைத் தலைவர்களுடன் நெட்வொர்க் உருவாக்கி, நம் இனத்தின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பது என் உறுதியான நிலைப்பாடாகும்.