இலங்கையின் சனத்தொகையில் ஈழத்தமிழர்களின் இருப்பு!  : பா. அரியநேத்திரன்

இலங்கையில் குடித்தொகை பெருக்கத்தில் தமிழர்களின் குடிப்பெருக்கம்  முழு இலங்கை யில் 2012, ல்,11.2, வீதமாக இருந்த தொகை கணக் கெடுப்புடன் ஒப்பிடும்போது 2004,ல் 12.3, வீதமாக அதிகரித்து  1.1, வீதம், அதிகரிக்கப்பட் டும், வடக்கு கிழக்கில் தமிழர்கள் எண்ணிக்கை குறைந்தும் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.
கடந்த 2012ல் வெளியிடப்பட்ட சனத் தொகை புள்ளிவிரத்துடன் இறுதியாக 2024ல் கணக்கெடுக்கப்பட்டு 2025ல் வெளியிடப்பட்ட மாவட்ட ரீதியிலான புள்ளிவிபரத்தில் எமது வடகிழக்கு தாயகத்தில் உள்ள எட்டு மாவட் டங்களையும் கூர்ந்து கவனித்தால் ஈழத்தமிழர்களு டைய சனத்தொகை குறைவடைந்துள்ளதை அவ தானிக்கலாம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டுத் தமிழர்கள் 2.3, வீதம் கூடியுள்ளது.
வடகிழக்கு புள்ளிவிபரம் இனரீதியாக
1.யாழ்ப்பாணம்.
தமிழர்கள். 2012, 98.9,வீதம் ~2024,98.6,வீதம்.   (0.3, வீதம் குறைவு) சிங்களவர்,2012,0.4, வீதம் -2024,0.6,வீதம்          (0 .2,வீதம்அதிகரிப்பு) முஸ்லீம்: 2012,0.4,  வீதம் – 2024,0,7,வீதம்               ( 0.3,வீதம்  அதிகரி
ப்பு) மலையகத் தமிழர்:2012,0.3,வீதம்-2024,0.1, வீதம். (0.2, வீதம் குறைவு)
2.கிளிநொச்சி.
தமிழர்கள். 2012,97.3,வீதம்- 2024,97.3,வீதம் ( மாற்றமில்லை) சிங்களவர்,2012,1.2,வீதம் – 2024,1.2, வீதம் ( மாற்றமில்லை) முஸ்லீம், 2012,0.6,வீதம் – 2024,0.9, வீதம்             (0.3,அதிகரிப்பு) மலையகத்தமிழர். 2012,0.9,வீதம் -2024,0.5%        (0.4,வீதம் குறைவு)
3.மன்னார்.
தமிழர்கள். 2012,80.4,வீதம்-2024,72.7,வீதம்       (7.7,வீதம் குறைவு) சிங்களவர்.2012,2.3, வீதம்-2024,0.5,வீதம்  (1.8,வீதம் அதிகரிப்பு) முஸ்லீம். 2012,16.5, வீதம் -2024,26.5,வீதம் (10, வீதம் அதிகரி ப்பு) மலையகத்தமிழர்.2012,0.7% – 2024,0.3% ( 0.4% குறைவு)
4.வவுனியா.
தமிழர்கள், 2012,82.0,வீதம் – 2024,78.4,வீதம் ( 9.6,வீதம் குறைவு) சிங்களவர்,2012,10.0,வீதம் -2024,10.8,வீதம்      ( 0,8,வீதம் அதிகரிப்பு) முஸ்லீம், 2012,6.8,வீதம்- 2024,10.8,வீதம்            ( 4,வீதம்அதிகரிப்பு)
மலையகத்தமிழர்,2012,1.1,வீதம்-2024,0.9,வீதம்
( 0.2,வீதம் குறைவு)
5.முல்லைத்தீவு.
தமிழர், 2012,85.8,வீதம் – 2024, 88.1,வீதம்          ( 2.3,வீதம் அதிகரிப்பு) சிங்களவர்,2012,9.7,வீதம் – 2024, 9.1,வீதம்          (0.6,வீதம் குறைவு)முஸ்லீம், 2012,2.0, வீதம்- 2024, 2.5,வீதம் (0.5,வீதம் அதிகரிப்பு)
மலையகத்தமிழர், 2012,2.5,வீதம் -2024,0.2,வீதம்
( 2.3,வீதம் குறைவு)
வடமாகாணத்தில் 2012, கணக்கெடுப்புடன் 2024  ஒப்பீடு செய்தால்..
தமிழர் 20.1 வீதம் குறைவடைந்துள்ளது, சிங்களவர் 2.8, வீதம் அதிகரித்துள்ளது. முஸ்லீம் கள்,15.1வீதம் அதிகரித்துள்ளது. மலையகதல தமிழர்,3.5, வீதம் குறைவடைந்துள்ளது.
கிழக்குமாகாணம்:
1.மட்டக்களப்பு.
தமிழர்.2012, 72.3, வீதம்- 2024,71.3, வீதம் (1,வீதம் குறைவு) சிங்களவர், 2012,1.3,வீதம் -2024,1.2,வீதம்  0 ,1,வீதம் குறைவு) முஸ்லீம்,2012, 25.4,வீதம் – 2024, 26.9,வீதம்( 1.5,வீதம்அதிகரிப்பு)மலையகத்தமிழர்,2012,0.4,வீதம்-2024, 0.2,வீதம்
( 0.2,வீதம் குறைவு)
2.அம்பாறை.
தமிழர்,2012, 17.3,வீதம்- 2024, 16.9,வீதம்
( 0.4,வீதம் குறைவு) சிங்களவர்,2012,30.9,வீதம்  -2024,37.1,வீதம் (6.2,வீதம் அதிகரிப்பு)முஸ் லீம், 2012,43.4,வீதம் – 2024,45.6,வீதம்    ( 2.2,வீதம்அதிகரி ப்பு) மலையகத்தமிழர்,2012,0.1,வீதம்-2024, 0.1,வீதம் ( மாற்றமில்லை)
3.திருகோணமலை.
தமிழர், 2012, 30.7,வீதம் – 2024, 28.9,வீதம்.       (1.8,வீதம் குறைவு) சிங்களவர்,2012, 26.7, வீதம்- 2024, 24.5, வீதம் ( 2.2, வீதம் குறைவு) முஸ்லீம், 2012,41.8,வீதம்- 2024, 46.1,வீதம் ( 4.4,வீதம் அதிகரி ப்பு) மலையகத்தமிழர்,2012, 0.3,வீதம்- 2024, 0.2, வீதம் (0.1, வீதம் குறைவு) கிழக்கு மாகாணத்தில் 2012, கணக்கெடுப்புடன் 2024, ஒப்பீடு செய்தால்..
தமிழர் 3.5, வீதம் குறைவு.
சிங்களவர் 4.3, கூடியுள்ளது.
முஸ்லீம்கள் 13,3, வீதம் கூடியுள்ளது.
மலையகத்தமிழர் 0.3, வீதம் குறைவு
வடக்கு கிழக்கில் இரண்டு மாகாணங்களையும் 2012,ஆண்டுடன்  2024, கணக்கெடுப்பை ஒப்பீடு செய்து அவதானிக்கும் போது தமிழர்கள் 23.4,வீதம் குறைவு. சிங்களவர் 7,1,வீதம் கூடியுள்ளனர். முஸ்லீம்கள் 28.3, வீதம் கூடியுள்ளனர். மலையகத் தமிழர் 3.8,வீதம் குறைவு.
வடகிழக்கு தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டியது 2012ல் இருந்த தமிழர் தொகை யைவிட 2024ல் குறைந்தும், ஏனைய சிங்கள, முஸ்லீம் மக்கள் தொகை கூடியும் உள்ளது 12, வருடங்களில் ஏற்பட்ட மாற்றம். காரணங்கள் பல கூறலாம். இடப்பெயர்வு, பொருளாதார வறுமை, தொழில் இன்மை, இவைகளுடன் தமிழரின் பிறப்பு வீதம் ஏனைய சமூகத்துடன் ஒப்பிடும்போது குறைவடைந்து செல்கிறது என்பதும் உண்மை.
எனினும் வடகிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் 2012, புள்ளிவிபரத்துடன் ஒப்பீடு செய்தால் 2024, ல் தமிழர்களின் தொகை  சில மாவட்டங்களில் சற்று கூடியுள்ளது என்பது உண்மை.
1945ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர் களை அமைதியான தலைமுறையினர் என்றார்கள். அவர்கள் பெரிதாக குடித்தொகை பெருக்கத்தை காட்டவில்லை. 1945ஆண் ஆண்டு உலகப்போர் முடிவடைந்தது.
1945 தொடக்கம் 1950ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் ஒரு வீட்டில் 8,10, பிள்ளைகளை பெற்றார்கள். அதனால் குடும்ப அங்கத்தவர்கள் எண்ணிக்கை கூடியது ஒரு காலத்தில் 13 இலட்சம்பேர் யாழ்ப்பாணமாவட்டத்தில் இருந் தார்கள் இப்போது சரி அரைவாசிப்பேர் புலம் பெயர்ந்தமையாலும், புலம் பெயராதவர்களின் பிறப்பு வீதம் குறைந்து செல்வதாலும், இலங்கையில் வேறுமாவட்டங்களில் வாழ்வதா லும் யாழ்மாவட்டத்தில் பாராளுமன்ற தமிழர் பிரதி நிதித்துவமும் வருடாவருடம் குறை வடைகிறது.
இதற்கு ஒரு சிறு உதாரணம் யாழ்மாவட்டத் தில் 2013, மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கொழும்பில் இருந்து வரவழைத்த சி.வி. விக்கினேஷ்வரன் ஐயா 2015, பாராளுமன்ற தேர்தலில் கொழும்பில் இருந்து வரவழைத்து வேட்பாளராக நிறுத்தப்பட்ட எம்.ஏ. சுமந்திரன், மட்டக்களப்பில் கண்டியில் இருந்து 2020, தேர்தலில் நிறுத்தப்பட்ட இ.சாணக்கியன் ஆகியோர்களின் குடும்ப அங்கத்தவர்கள் வடகிழக்கில் வாக்குரிமை இல்லை அவர்கள் வேறுமாவட்டங்களில் விரும்பி யவர்களை ஆதரிப்பவர்கள்.
இதுபோன்றுதான் ஈழத்தமிழர்களின் குடிப் பரம்பல் வடகிழக்கிற்கு வெளியிலும் உள்ளது என்பதற்கான ஒரு சிறு விளக்கம் மாவட்ட விகிதா சாரத்தேர்தல் முறை மாவட்டத்தில் வாக்களிப்பவர் களாலேயே யார் மக்கள் பிரதிநிதி என்பது தீர் மானிக்கப்படுகிறது.
தமிழர்களின் குடித்தொகை வடகிழக்கில் குறைந்திருக்கிறது. இஸ்லாமியர்களின் குடித் தொகை பெருக்கம் 10.5 வீதத்திற்கு வளர்ச்சியடைந் துள்ளது. மலையகத்தமிழர்களை பொறுத்தவரை யில் 2012, ல் 8இலட்சத்து 39அயிரத்து 504, தமிழர்கள் (4.2, வீதம்)வாழ்ந்தனர்,2024, கணக்கெடுப்பின்படி அது 6இலட்சத்து 360, (2.8,வீதம்) ஆக வீழ்ச்சிய டைந்துள்ளது.
தமிழர்களின் குடித்தொகை பெருக்கம் மெல்ல மெல்லமாக வடகிழக்கு தாயகத்தில் குறைந்து செல்வதை புள்ளிவிபர மாவட்ட தரவுகள் கோடிட்டு காட்டியுள்ளது. இலங்கையின் மொத்த தமிழர்கள் 2012, ல் 11.2, வீதம் தற்போது 2024, ல் 12.3, வீதம் 1.1, வீதத்தால் உயர்வடைந்துள்ளதாக பெருமை பேசி னாலும் ஈழத்தமிழர்களின் தாயகமாக கருதப்படும் வடகிழக்கில் தமிழர்களின் எண்ணிக்கை குறைவ டைவதையே காணலாம்.
தற்போது ஐந்தரை இலட்சம்பேர் மாத்திரமே யாழ்ப்பாணத்தில் உள்ளார்கள். ஏனையோர் புலம்பெயர் தேசங்களுக்கு சென்று அங்கே குடித்தொகையை பெருக்குகின்றார்கள். 2024, சனத்தொகை கணிப்பீட்டை மேலோட்டமாக பார்த்தால் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையின் சனத்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து ஆய்வு செய்து புதிய தரவுகளை வெளிப்படுத்தியுள்ளது.
இதன் பிரகாரம் நாட்டின் மொத்த சனத் தொகையானது 21,763,170 என கணக்கிடப்பட்டுள் ளது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்திருந்தாலும், மக்கள் தொகை அதிகரித்து வருவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டின் மக்கள் தொகை 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை விட 1,403,731 ஆக அதிகரித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் நாட்டின் மக்கள் தொகை 21,763,170 ஆகும். இது அண்ணளவாக சனத்தொகை 2.2 மில்லியனை நெருங்கியுள்ளதை காட்டுகிறது.
மாகாண ரீதியாக எடுத்துக் கொண்டால், நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 28.1% என்ற மிகப் பெரிய மக்கள் தொகை மேல் மாகாணத்தில் வசிக்கும் அதே நேரத்தில் மிகக் குறைந்த மக்கள் தொகையான 5.3% வடக்கு மாகாணத்தில் வாழ் வதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாவட்ட மட்டத்தில் மக்கள் தொகை பரவலைக் கருத்தில் கொள்ளும்போது, அதிக மக்கள் தொகை கம்பஹா மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன் அந்த எண்ணிக்கை 2,433,685 ஆகும். இரண்டாவது இடத்தில் உள்ள கொழும்பு மாவட்டத்தில் 2,374,461 பேர் வசிக்கின்றனர். அதன்படி, இந்த இரண்டு மாவட்டங் களிலும் மாத்திரம் தலா 02 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை வசிப்பதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த இரண்டு மாவட்டங்களைத் தவிர, முன்னைய மக்கள் தொகை கணக்கெடுப்புகளைப் போன்று இம்முறையும், குருநாகல் 1,760,829, கண்டி 1,461,269, களுத்துறை 1,305,552, இரத்தினபுரி 1,145,138 மற்றும் காலி 1,096,585 ஆகிய மாவட்டங்களில் அதிக மக்கள் தொகை பதிவாகியுள்ளது.
அதேநேரம் முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களாக வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, மற்றும் வவுனியா மாவட்டங்கள் பதிவாகியுள்ளன.
முல்லைத்தீவில் 122,542 பேரும், மன்னாரில் 123,674 பேரும், கிளிநொச்சியில் 136,434 பேரும் வவுனியாவில் 172,257 பேரும் வசிக்கின்றனர். இதற்கிடையில், அதிகபட்ச சராசரி வளர்ச்சி விகிதம் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளது, இது 2.23 ஆகவும் பதிவாகியுள்ளது. வவுனியா மாவட்டத்தில் மிகக் குறைந்த சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளதுடன், இது 0.001 ஆக பதிவாகியுள்ளது.
மேலும், முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்புகளைப் போலவே, ஒரு சதுர கிலோமீட்டருக்கு 3,549 பேர் என்ற அதிகபட்ச மக்கள் தொகை அடர்த்தி கொழும்பு மாவட் டத்திலிருந்து பதிவாகியுள்ள அதே நேரத்தில் மிகக் குறைந்த மக்கள் தொகை அடர்த்தி முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளது. அங்கு மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 50 பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசியல் யாப்பின்படி விகிதாசார தேர்தல் அரசியல், மாவட்ட ரீதியிலான அபிவிருத்தி, வேலைவாய்பு, வளப்பங்கீடு, பொருளாதாரதிட்டமிடல் அனைத்துமே மக்கள் தொகையினை முன்னிறுத்தியே பங்கீடுகள் பகிரப் படும் நிலை உள்ளது. எனவே ஒரு இனத்தின் நிலம் மட்டும் விடுதலை பெறுவதில்லை நிலத்தில் வாழும் சனத்தொகையிலும் இனவிடுதலை தங்கியுள்ளது என்பதால் எதிர்காலத்தில் வடகிழக்கு வாழ் தமிழர்கள் சிந்திக்க வேண்டும் அடுத்த கணக் கெடுப்பு 2034, ம் ஆண்டு இந்த நிலைமையை மாற்ற இப்போதே முயற்சிக்க வேண்டும்.