நிதி நிலைமை மீண்டும் பலவீனமடையும் என்று எவரும் இனி கனவு காண கூடாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
2026 நிதியாண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை (07) நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சபைக்கு சமர்ப்பித்தார்.
இதன்போது உரையாற்றுகையில்,
பொருளாதார மீட்சிக்கு எடுத்த சிறந்த தீர்மானங்களால் பெருமைக்கொள்கிறோம். பேரண்ட பொருளாதாரத்தை வளர்ச்சி பெற செய்யவும்,நிதி ஒழுக்கத்தை நிலைப்படுத்தவும் கடுமையான எடுத்துள்ளோம். பணவீக்கத்தை 5 சதவீதத்துக்கு குறைவான மட்டத்தில் பேணுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.நிதி நிலைமை மீண்டும் பலவீனமடையும் என்று எவரும் இனி கனவு காண கூடாது எனத் தெரிவித்தார். இலங்கையின் அரச முறை கடன் மறுசீரமைப்பு எதிர்வரும் மாதத்துக்குள் நிறைவு பெறும் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 4.5 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் 2025 ஆம் ஆண்டில் 3.8 சதவீதமாக குறைவடைந்துள்ளது என நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நிதி ஒழுக்கத்தை நாங்கள் சட்டத்தால் உறுதிப்படுத்தியுள்ளோம். நிதி ஒழுக்கமில்லாத காரணத்தால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது. நிதி ஒழுக்கத்தை நாங்கள் சட்டத்தால் உறுதிப்படுத்தியுள்ளோம். ஆட்சியாளர் தவறிழைத்தாலும் மக்கள் நீதிமன்றம் செல்லலாம் எனத் தெரிவித்தார்.ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் 210 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைக்கப்படும். மேலும் சமூக பாதுகாப்பு திட்டம் அடுத்த ஆண்டு மறுசீரமைக்கப்படும். நீதித்துறை சேவைக்கான ஒழுக்க விதிகளை உருவாக்குவதற்கு விசேட குழு நியமிக்கப்படும். கைச்சாத்திடப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மறுசீரமைக்க விசேட குழு நியமிக்கப்படும். ஒட்டுமொத்த வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 342,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும். தேசிய பாற்பண்ணை தொழிற்றுறையை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும். வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு சலுகை வட்டியில் வீட்டு கடன் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் . ஊடகவியலாளர்கள் உயர்கல்வி மற்றும் ஊடக தொழிற்றுறைக்குரிய உபகரணங்களை கொள்வனவு செய்ய கடன் வழங்கலுக்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் 2025 ஆம் ஆண்டு முதல் 10 மாதகாலப்பகுதியில் வாகன இறக்குமதிக்காக 1933 மில்லியன் டொலர் கடன்பற்று பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்தோடு வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் வீதி பாதுகாப்பு வேலை திட்டம் ஒன்றை அமுல்படுத்த 1000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும். மன்னார் மாவட்டத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு அனர்த்தத்துக்கு தீர்வு காணும் வகையில் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த 5000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும். யானை – மனித மோதலுக்கு தீர்வு காணும் பொருட்டு வனவள திணைக்களத்துக்கு வாகனங்கள் கொள்வனவு செய்யவும், மின்வேலி அமைக்கவும் 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.புகையிரத சேவைக்கு நவீன புகையிரதங்களை கொள்வனவு செய்ய நிதி ஒதுக்கீடு.திண்ம கழிவகற்றலுக்கு 900 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும். கட்டுநாயக்க விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் செயற்படுத்தப்படும்.குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டுக் கடன் வழங்க 3000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும். தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்தும் முகமாக வடக்கு தென்னை முக்கோண வலயத்துக்கு 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
மேலும் இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்ட 1200 குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணிப்பதற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 1000 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக 2000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும். பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல கொடுப்பனவு 5000 ரூபாய் இதர கொடுப்பனவு 2,500 ரூபாய் அதிகரிக்கப்படும். ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு 2,500 ரூபாய் அதிகரிக்கப்படும். உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க 2500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும். 2026 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் டிஜிட்டல் அடையாள அட்டை விநியோகிக்கப்படும்.கிரான் மற்றும் பொன்டுகால் பாலங்களை அபிவிருத்தி செய்ய 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான தொடர்மாடி குடியிருப்பு நிர்மாணத்துக்காக 15 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
‘வலுசக்தி துறையை வினைத்திறனாக்கும் வகையில் இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்படும். வீதி நாய்களை பராமரித்தல், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் இறந்த பின்னர் அதனை அடக்கம் செய்தல் மற்றும் எரித்தல் ஆகியவற்றுக்காக பிலியந்தலை மற்றும் கெஸ்பேவ ஆகிய பகுதிகளில் செயற்திட்டம் ஒன்றை மேற்கொள்ள 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும்’ என நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.



