ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சயீத் பின் முபாரக் அல் ஹஜேரி நேற்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு வந்துள்ளார்.
இலங்கை – ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையிலான உயர்மட்டக் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் நோக்குடன்,இவர் கொழும்பு வந்துள்ளார். கொழும்பில் நடைபெறுகம் இக்கூட்டத்தில், வெளிநாட்ட லுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர இணைத் தலைமை வகிக்கின்றார்.
வெளிநாட்ட லுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க ஆகியோரையும் இவர் சந்திக்கவுள்ளார்.
மத்திய கிழக்கில் இலங்கையின் மிக முக்கியமான வர்த்தகப் பங்காளி நாடான ஐக்கிய அரபு ராஜ்ஜியம் 2024 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏழாவது பெரிய ஏற்றுமதி நாடாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்களைக் கொண்ட ஒரே ஒரு நாடாகவும், ஐக்கிய அரபு அமீரகம் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.



